நிறுவனங்களுக்குக் கூடுதல் அறிவுசார் சொத்து வளங்கள்

நிறுவனங்களுக்குக் கூடுதல் அறிவுசார் சொத்து வளங்கள்

2 mins read
a2e67e8b-c6db-487d-a234-ebe3f3ae8b18
-

கொவிட்-19 சூழ­லில் வர்த்­த­கத்தை மேம்­ப­டுத்த நிறு­வ­னங்­க­ளுக்கு உத­வும் வகை­யில் கூடு­தல் அறி­வு­சார் சொத்து வளங்­களை அர­சாங்­கம் நேற்று அறி­வித்­தது.

ஏற்­கெ­னவே பயன்­பாட்­டில் உள்ள புதிய வர்த்­த­கப் பெயர்­கள், வர்த்­த­கச் சின்­னங்­கள், இணை­யத்­த­ளங்­கள், சமூக வலைத்­த­ளப் பெயர்­கள் ஆகி­ய­வற்­றைக் காட்­டும் தேடு­தல் அம்­ச­மும் அதில் அடங்­கும்.

அதைப் பயன்­ப­டுத்தி

தங்­க­ளுக்­கெ­னப் புதிய வர்த்­த­கப் பெயர், சின்­னங்­கள் முத­லி­யவை குறித்து வர்த்­த­கர்­கள் முடி­வெ­டுக்­க­லாம்.

அறி­வு­சார் சொத்து தொடர்­பான விவ­கா­ரங்­கள் குறித்து கூடு­தல் சட்ட ஆலோ­ச­னை­களும் நிறு

வனங்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

நிறு­வ­னங்­க­ளுக்­காக நடத்­தப்­படும் வாராந்­திர சட்ட ஆலோ­ச­னைக் கூட்­டங்­களில் சேவை­யாற்­றும் அறி­வு­சார் சொத்து சட்ட நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் அறி­வு­சார் சொத்து தொடர்­பான சர்ச்­சை­க­ளுக்­குத் தீர்வு காண்­பதை மேம்­ப­டுத்த சிங்­கப்­பூ­ரின் அறி­வு­சார் சொத்து அலு­வ­ல­கம், அறி­வு­சார் சொத்து நிபு­ணத்­து­வச் சாட்­சி­கள் பட்­டி­ய­லைத்

தயா­ரித்­துள்­ளது.

இவர்­கள் அறி­வு­சார் சொத்து தொடர்­பான வழக்கு விசா­ரணை

களி­லும் சம­ர­சப் பேச்­சு­வார்த்தை

களி­லும் உத­வ­லாம்.

தற்­போ­தைய பட்­டி­ய­லில் பொறி

யியல், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு,

உற்­பத்தி, தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்­பம், மருந்­தி­யல் போன்ற துறை­க­ளைச் சேர்ந்த 16 நிபு­ணத்­துவ சாட்­சி­கள் உள்­ள­னர்.

அறி­வு­சார் சொத்து சட்ட ஆலோ­ச­னைக் கூட்­டங்­க­ளின்­போது அதில் பங்­கெ­டுக்­கும் சட்ட நிறு­வ­னங்­கள் சட்­டத் துறை மூன்­றாம், நான்­காம் ஆண்டு மாண­வர்­க­ளுக்கு வழி­காட்­டும் திட்­ட­மும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சேண்ட்ஸ் எக்ஸ்போ, மாநாட்டு மையத்­தில் நடை­பெ­றும் அறி­வு­சார் சொத்து வாரத்­தின் தொடக்க விழா­வில் இத்­திட்­டங்­களை சட்ட இரண்­டாம் அமைச்­சர் எட்­வின் டோங் அறி­வித்­தார்.

"இந்தத் திட்டங்கள் சிங்கப்பூர் நிறுவனங்களும் அறிவுசார் சொத்து நிபுணர்களும் தொடர்ந்து வளர்ச்சி அடைய வழிவகுக்கும் என நம்புகிறோம்.

"அறிவுசார் சொத்து நடுவமாக சிங்கப்பூர் கொண்டுள்ள நிலையை இவை மேலும் பலப்படுத்தும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது," என்று அமைச்சர் டோங் தெரிவித்தார்.