உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளில் (பாராலிம்பிக்ஸ்) பங்கெடுக்கும் சிங்கப்பூர் வீரர்கள், வீராங்கனை
களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டு களின் தொடக்க விழா நேற்று இரவு ஜப்பான் தலைநகர் தோக்கி யோவில் நடைபெற்றது.
இந்த உயர்தரப் போட்டிக்குத் தகுதி பெற இப்போட்டியாளர்கள் பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும் கடுமையாக உழைத்
திருப்பதாகவும் பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
"போட்டியாளர்கள் கடுமையாக உழைத்தது மட்டுமல்ல, உடற்
குறையுள்ளவர்களாக இருப்பதால் வாழ்நாள் முழுவதும் பிறர் அவர்
களைக் குறைத்து மதிப்பிடுவதை எதிர்கொண்டு அதை முறியடித்துள்ளனர். இப்போது அவர்கள் பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளில்
சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கின்றனர். அம்பு எய்தல் போட்டியில் பங்கெடுக்கும் நூர் ஷியாஹிடா போன்ற போட்டியாளர்கள் ஏற்கெனவே உலகளாவிய நிலையில் தங்கள் திறமையை நிரூபித்துவிட்டனர்.
"மிதிவண்டிப் பந்தயத்தில் பங்கெடுக்கும் ஸ்டீவ் டீ போன்று பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் சிலர் முதல்முறையாகப் போட்டி யிடுகின்றனர்.
"ஸ்டீவ் எனது அங் மோ கியோ குழுத் தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்.
வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் உங்கள் செயல்பாடு சிங்கப்பூரைப் பெருமை அடையச் செய்யும்," என்று பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கும் போட்டியாளர்களைப் பிரதமர் லீ ஊக்குவித்தார்.
அம்பு எய்தல், திடல்தடப் போட்டி, மிதிவண்டிப் பந்தயம், குதிரைச் சவாரிப் போட்டி, எடைதூக்கும் போட்டி, நீச்சல் போட்டி ஆகியவற்றில் சிங்கப்பூரைச் சேர்ந்த பத்து போட்டியாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பாராலிம்பிக்ஸ் விளையாட்டுகள் அடுத்த மாதம் 5ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இவ்விளை யாட்டுகளில் பங்கெடுக்கும்
சிங்கப்பூர் குழுவுக்கு ஆதரவு தரும்படி சிங்கப்பூரர்களைப்
பிரதமர் லீ கேட்டுக்கொண்டுள்ளார்.

