சிங்கப்பூர் பாராலிம்பிக்ஸ் குழுவுக்குப் பிரதமர் வாழ்த்து

சிங்கப்பூர் பாராலிம்பிக்ஸ் குழுவுக்குப் பிரதமர் வாழ்த்து

2 mins read
58b775ac-ec30-46a6-9c0e-64de2bfe13ab
-

உடற்­கு­றை­யுள்­ளோ­ருக்­கான ஒலிம்­பிக் விளை­யாட்­டு­களில் (பாரா­லிம்­பிக்ஸ்) பங்­கெ­டுக்­கும் சிங்­கப்­பூர் வீரர்­கள், வீராங்­கனை

களுக்­குப் பிர­த­மர் லீ சியன் லூங் தமது வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துள்­ளார்.

பாரா­லிம்­பிக்ஸ் விளை­யாட்டு களின் தொடக்க விழா நேற்­று­ இ­ரவு ஜப்­பான் தலை­ந­கர் தோக்கி ­யோ­வில் நடை­பெற்­றது.

இந்த உயர்­த­ரப் போட்­டிக்­குத் தகுதி பெற இப்­போட்­டி­யா­ளர்­கள் பல தியா­கங்­க­ளைச் செய்­தி­ருப்­ப­தா­க­வும் கடு­மை­யாக உழைத்

திருப்­ப­தா­க­வும் பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்டு உள்­ளார்.

"போட்­டி­யா­ளர்­கள் கடு­மை­யாக உழைத்­தது மட்­டு­மல்ல, உடற்

குறை­யுள்­ள­வர்­க­ளாக இருப்­ப­தால் வாழ்­நாள் முழு­வ­தும் பிறர் அவர்

களைக் குறைத்து மதிப்­பி­டு­வதை எதிர்­கொண்டு அதை முறி­ய­டித்­துள்­ள­னர். இப்­போது அவர்­கள் பாரா­லிம்­பிக்ஸ் விளை­யாட்­டு­களில்

சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­கின்­ற­னர். அம்பு எய்­தல் போட்­டி­யில் பங்­கெ­டுக்­கும் நூர் ஷியா­ஹிடா போன்ற போட்­டி­யா­ளர்­கள் ஏற்­கெ­னவே உல­க­ளா­விய நிலை­யில் தங்­கள் திற­மையை நிரூ­பித்­து­விட்­ட­னர்.

"மிதி­வண்­டிப் பந்­த­யத்­தில் பங்­கெ­டுக்­கும் ஸ்டீவ் டீ போன்று பாரா­லிம்­பிக்ஸ் விளை­யாட்­டு­களில் சிலர் முதல்­மு­றை­யா­கப் போட்டி யிடு­கின்­ற­னர்.

"ஸ்டீவ் எனது அங் மோ கியோ குழுத் தொகு­தி­யைச் சேர்ந்த குடி­யி­ருப்­பா­ளர்.

வெற்றி பெற்­றா­லும் தோல்வி அடைந்­தா­லும் உங்­கள் செயல்­பாடு சிங்­கப்­பூ­ரைப் பெருமை அடை­யச் செய்­யும்," என்று பாரா­லிம்­பிக்ஸ் விளை­யாட்­டு­களில் சிங்­கப்­பூ­ரைப் பிர­தி­நி­திக்­கும் போட்­டி­யா­ளர்­க­ளைப் பிர­த­மர் லீ ஊக்­கு­வித்­தார்.

அம்பு எய்­தல், திடல்­த­டப் போட்டி, மிதி­வண்­டிப் பந்­த­யம், குதி­ரைச் சவா­ரிப் போட்டி, எடை­தூக்­கும் போட்டி, நீச்­சல் போட்டி ஆகி­ய­வற்­றில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த பத்து போட்­டி­யா­ளர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.

பாரா­லிம்­பிக்ஸ் விளையாட்­டு­கள் அடுத்த மாதம் 5ஆம் தேதி நிறை­வு­பெ­று­கிறது. இவ்­விளை யாட்டுகளில் பங்­கெ­டுக்­கும்

சிங்­கப்­பூர் குழு­வுக்கு ஆத­ரவு தரும்­படி சிங்­கப்­பூ­ரர்­க­ளைப்

பிர­த­மர் லீ கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.