பகுதிநேர இல்லச் சேவைத் திட்டம் அடுத்த மாதம் 1ஆம் தேதியிலிருந்து நிரந்தரமாக்கப்படுகிறது.
இல்லத் துப்புரவுச் சேவைகள் போன்றவை இதில் அடங்கும்.
இத்திட்டம் மூலம் பகுதிநேர இல்லத் துப்புரவுப் பணியாளர்
களின் சேவைகளைப் பயன்
படுத்திக்கொள்ளலாம்.
இத்தகைய சேவைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள அமைச்சு நேற்று முன்தினம் தெரிவித்தது.
இல்லச் சேவைத் திட்டம் 2017ஆம் ஆண்டில் அறிமுகப்
படுத்தப்பட்டது. முதலில் அதில் 15 நிறுவனங்கள் பங்கெடுத்தன. தற்போது இந்த எண்ணிக்கை 76ஆக உயர்ந்துள்ளது.
இந்த 76 நிறுவனங்களும் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்குத் தங்கள் சேவைகளை வழங்கு கின்றன. இல்லத் துப்புரவுப் பணிகளுடன் மளிகைப் பொருட்களை வாங்க உதவுவது, வாகனங்களைக் கழுவுவது, செல்லப் பிராணிகளைப் பார்த்துக்கொள்வது போன்ற சேவைகளை வழங்க இந்நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

