இர்ஷாத் முஹம்மது
கொவிட்-19 கொள்ளை நோய்க் காலத்தில் பல வர்த்தகங்கள் செயல்படுவதே போராட்டமாக இருந்தாலும் மற்ற சில நிறுவனங்கள் எந்த மாற்றமும் இன்றி இயங்கு கின்றன. சிங்கப்பூருக்குள் பொருட்களை இறக்குமதி செய்து, அதை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுச் சென்று விற்கும் நிறுவனங்கள் அதில் அடங்கும்.
அந்த வரிசையில் 'பி&எஸ் சர்வீசஸ்' சரக்குப் போக்குவரத்து நிறுவனமும் ஒன்று. 'பாய்' என்று அடையாளம் காணப்படும் 34 வயது முகமது நூர் முகமது சலீம், கொவிட்-19 சூழலில் தொடங்கிய அந்த நிறுவனம் தாம் விரும்பும் ஒன்றாக இருந்ததே தவிர திட்டமிடாத வகையில் அமையவில்லை.
சரக்குப் போக்குவரத்துத் துறையில் 2007ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய அவருக்கு முதல் கட்ட போக்குவரத்து என்பது அத்துப்படி. முதல் கட்ட போக்குவரத்து என்பது துறைமுகம் போன்ற இடங்
களிலிருந்து சேமிப்புக் கிடங்கு போன்ற இடங்களுக்கு அடுத்தக் கட்ட விநியோகத்திற்காகக் கொண்டுச் செல்லும்.
சரக்குகளை ஒரே இடத்திற்குக் கொண்டு செல்வதற்காக அவற்றை ஒருமுகப்படுத்தும் முகவர்கள் இத்
தகைய சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களின் வாடிக்கையாளர்
களாக விளங்குவர்.
உலகளாவிய நெருக்கடிநிலை நிலவும் பட்சத்தில் புதிய தொழிலைத் தொடங்குவது குறித்து ஆழமாக சிந்தித்த முகமது நூர், இரண்டு காரணங்களால் இதில் இறங்கினார்.
பல ஆண்டுகளாக இத்துறையில் வலுவான உறவுகளை மேம்
படுத்தி வந்த அவருக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு வழங்குவதாகக் கூறினர்.
அடுத்ததாக, 'ஹவ்லியோ' எனும் மின்னிலக்க சரக்குப் போக்கு
வரத்து சேவை வழங்கும் நிறுவனம் வழங்கிய உத்தரவாதம். தொழில்நுட்ப ஆலோசகர் செபஸ்டியன் ஷென், தளவாடத் துறை தொழில்முனைவர் அல்வின் யா இருவரும் தொடங்கிய நிறுவனம் அது. அந்தத் துறையில் உள்ள சவால்கள், திறனற்ற அம்சங்களை அவர்கள் இருவரும் புரிந்துகொண்டு, முகமது நூரின் தொழில்முனைப்புப் பயணத்தை சரியான மின்னிலக்க தீர்வுகளைக் கொண்டு ஆதரவு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தனர். "என் தொழிலைத் தொடங்க எனக்கு தைரியத்தைக் கொடுத்தனர்," என்றார் நூர்.
இந்த ஆதரவு இருந்தாலும் கொவிட்-19 ஏற்படுத்திய நெருக்கடி சீனாவின் எல்லைகள் மூடப்பட்ட நிலையில் இறக்குமதி, ஏற்றுமதி பெருமளவில் குறைந்தது. அதனால் அவரது நிறுவனத்திற்கு வருமானம் குறைந்தது.
அந்த நேரத்தில் 'ஹவ்லியோ' நிறுவனத்தின் வேலைவாய்ப்பு சந்தைத்தளத்தில் இதர வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான சரக்குப் போக்குவரத்துத் தேவைகள் குறித்து அறிந்தார் நூர். இந்தச் சந்தைத்தளம் மூலம் அவருக்கு ஏதுவான வேலைகளை அவர் எடுத்து செய்ய வாய்ப்பளித்தது. அதன்மூலம் 'பி&எஸ்' நிறுவனம் 2020ஆம் ஆண்டை சீராகக் கடந்தது.
மின்னிலக்கப் பயணம்
தமது செயல்முறைகளை மேலும் நல்ல வகையில் நிர்வகிக்க புதிய மின்னிலக்கத் தொடர்பு தளத்திற்கு மாறியது 40 வருட கனரக வாகன நிறுவனம் 'தொங் லீ'.
அதன் 30 கனரக வாகன ஓட்டுநர்கள் எங்கு சென்று சரக்குகளை எடுக்கவேண்டும், வாகனங்கள் எங்கு உள்ளன என்பது அந்த வர்த்தகத்தின் வெற்றிக்கு மூலதனம்.
முன்பு 'பேஜர்கள்', 'வாக்கி டாக்கிகள்' மூலமும் பின்னர் 'மொபைல் தரவு' சாதனம் மூலமும் இந்தப் பணியைச் செய்துவந்த நிலையில் ஓட்டுநர்கள் வாகனத்தை மெதுவாகச் செலுத்தி குறுஞ்செய்திகளைப் படிக்க வேண்டியிருந்தது.
முந்தைய தொழில்நுட்பம் அல்லாமல் தனித்தனி கைக்கணினி சாதனங்களில் மின்னியல் முறையை வாகனங்களில் பொருத்தியது நிறுவனம். வயது அடிப்படையில் 50, 60களில் உள்ள 'தொங் லீ' ஓட்டுநர்களுக்கு மென்பொருள், சாதனம் இரண்டுமே புதியதாக இருந்த நிலையில் அவர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின்னர் பயன்பாட்டுக்கு ஏதுவாக புதிய முறை இருந்தது.
ஆக, சரக்குப் போக்குவரத்துத் துறையில் நீண்ட காலமாக நிலவி வரும் தேவையற்ற, அநாவசிய அம்சங்களைக் களைய 'தொங் லீ', 'பி&எஸ்' போன்ற நிறுவனங்கள் மின்னிலக்கத் தீர்வுகளை வேகமாக அரவணைக்க முடியும் என்பது தெரியவருகிறது.
தரவு பகிர்வு குறைபாடு, மனிதவளத்தை அதிகம் சார்ந்திருப்பது போன்ற விநியோகச் சங்கிலி துறையில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, இந்த அம்சங்களிலும் தளவாடம், நிதி போன்ற அம்சங்களிலும் மின்னிலக்கமயமாதலை விரைவுபடுத்த வேண்டிய தேவையை 'விநியோகச் சங்கிலி மின்னிலக்கமயமாதல்' செயற்கூட்டணி அறிந்தது.
திரு நூருக்கு அவரது தொழிலை விரிவுபடுத்தும் விருப்பம் உள்ள நிலையில் மின்னிலக்க முறைகளை அரவணைக்கும் மேலும் நிறைய ஓட்டுநர்கள் தேவைப்படுவார்கள் என்று அவர் நம்புகிறார்.

