'விதிமீறினால் மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கூறுவது நிலைமையைச் சிக்கலாக்கிவிடலாம்'

'விதிமீறினால் மனநலப் பிரச்சினை இருப்பதாகக் கூறுவது நிலைமையைச் சிக்கலாக்கிவிடலாம்'

2 mins read
6085f778-49b2-4b15-bd75-f1b095ff49cf
-

கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக விதி­மு­றை­க­ளைத் தெரிந்தே மீறு­வோர்க்கு மன­ந­லப் பிரச்­சினை இருப்­ப­தாக 'வார்த்­தை­களை அவிழ்த்­து­வி­டு­வது' கவ­லை­ய­ளிப்­பதாக உள்­ளது என்­றும் அது மன­நலம் குறித்த வடுவை மேலும் ஆழ­மாக்­கக்­கூ­டிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­து­வி­ட­லாம் என்­றும் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சரும் சுகா­தார இரண்­டாம் அமைச்­சரு­மான மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி தெரி­வித்­துள்­ளார்.

தெரிந்தே விதி­மீ­று­வோர், மன­நலப் பிரச்­சி­னை­யால் அதைச் செய்­ய­லாம் அல்­லது செய்­யா­மல் போக­லாம் என்­பதை திரு மச­கோஸ் ஒத்­துக்­கொண்­டார்.

ஆனால், "அத்­த­கைய செயல்­களை மன­ந­லத்­து­டன் இணைத்­துப் பேசு­வது, அவ்­வி­ஷ­யத்தை அற்­ப­மா­ன­தாக மட்­டும் ஆக்­கா­மல், விழிப்­பு­ணர்வு இல்­லா­மை­யை­யும் வெளிப்­படுத்­தி­வி­டும். மன­ந­லம் குறித்த அறிவை மேம்­ப­டுத்த உறு­தி­யாக நம்­மால் இன்­னும் அதி­க­மா­கச் செய்ய முடி­யும்," என்­றார் அவர்.

நேற்று நடை­பெற்ற 'சிங்­கப்­பூர் மன­ந­லக் கருத்­த­ரங்கு 2021' நிகழ்ச்சி­யின்­போது அமைச்­சர் மச­கோஸ் இவ்­வாறு பேசி­னார்.

மனி­தர்­கள் இயல்­பி­லேயே சமூ­கப் படைப்­பு­கள் என்று குறிப்­பிட்ட திரு மச­கோஸ், அவர்­கள் தங்­களது அன்­றாட சமூக உற­வா­டல்­க­ளைப் புதை­யல்­போ­லப் பார்க்­கின்­ற­னர் என்று சொன்­னார்.

"கொவிட்-19 கால­கட்­டத்­தில் நம் அன்­புக்­கு­ரி­ய­வர்­கள், நண்­பர்­கள், அக்­கம்­பக்­கத்­தில் உள்ள கடைக்­கா­ரர்­கள், பழ­கி­ய­வர்­கள், தெரிந்­த­வர்­கள் என்று சமூ­கத்­தில் உள்ள பல­ரு­ட­னும் பெரும்­பா­லும் நம்­மால் உற­வாட இய­ல­வில்லை. மக்­க­ளைப் பாது­காக்க அர­சாங்­கம் இந்­தக் கடி­ன­மான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டி­ய­தா­யிற்று. அதே வேளை­யில், சமூக அள­வில் மக்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­படும் அபா­யத்­தை­யும் அது ஏற்­ப­டுத்­தி­விட்­டது," என்று திரு மச­கோஸ் தெரி­வித்­தார்.

"அத்­து­டன், கொரோனா தொற்றி­வி­டுமோ என்ற பதற்­ற­மும் வாழ்­வா­தார இடை­யூ­று­க­ளால் ஏற்­பட்ட நிதிப் பிரச்­சி­னை­யும், நல்­வாழ்­வு­மீது தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி­விட்­டன," என்­றார் அவர்.

கொவிட்-19 சூழல் ஏற்­ப­டுத்­தி­யுள்ள மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்­வு­காண அர­சாங்­கம் ஏற்­கெ­னவே பல நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­வ­தாக அமைச்­சர் மச­கோஸ் குறிப்­பிட்­டார்.