பாதுகாப்பு இடைவெளித் தூதர்மீது பெண் புகார்

பாதுகாப்பு இடைவெளித் தூதர்மீது பெண் புகார்

2 mins read
3de2126a-0807-4f21-acdd-8b1e571c52ad
-

பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர் ஒரு­வர் தம்­மைத் திருட்­டுத்­த­ன­மாகப் பின்­தொ­டர்­வ­தா­கப் பெண் ஒரு­வர் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­துள்­ளார்.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம், பாது­காப்பு இடை­வெளி வழி­காட்டி நெறி­மு­றை­கள் குறித்து வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ரி­டம் பேச அப்­பெண்­ணுக்கு அந்த ஆட­வர் உத­வி­ய­தாகக் கூறப்­பட்­டது.

அதன்­பின், அந்த 20 வய­துப் பெண்­ணி­டம், 'அவர் அழ­காக இருப்­ப­தா­கக் கூறி, அவ­ருக்கு எப்­போது விடுப்­பு­நாள் என்­றும் காத­லர் இருக்­கி­றாரா என்­றும்' அந்த ஆட­வர் கேட்­ட­தா­கச் சொல்­லப்­படு­கிறது.

குமாரி இஸ­பெல் என அறி­யப்­படும் அந்த இளம்­பெண் தெம்­பனிஸ் 1ல் உள்ள ஓர் உண­வ­கத்­தில் பணி­பு­ரி­கி­றார்.

"எனது கைபேசி எண்ணை அவர் கேட்­டார். இன்ஸ்­ட­கி­ரா­மில் கணக்கு வைத்­துள்­ளேனா என்­றும் கேட்­டார். அழ­கான தோழி­கள் இருந்­தால் அவர்­க­ளைத் தனக்கு அறி­மு­கம் செய்து வைக்க முடி­யுமா என்­றும் கேட்­டார்," என்­றார் அந்த இளம்­பெண்.

ஒரு மாதத்­திற்­குப் பிறகு தமது கைபேசி எண்ணை இஸ­பெல் அந்த ஆட­வ­ரி­டம் கொடுத்­தார்.

"அதற்­காக இப்­போது பெரி­தும் வருத்­தப்­ப­டு­கிறேன். நான் முடி­யாது என்று சொல்­லி­யி­ருக்க வேண்­டும். இல்­லை­யேல், போலி­யான எண்­ணைத் தந்­தி­ருக்க வேண்­டும்," என்­றார் அவர்.

இவ்­வாண்­டுத் தொடக்­கத்­தில், இஸ­பெல்­லைப் புகைப்­ப­டம் எடுத்த அந்த ஆட­வர், அதை அவ­ருக்கு அனுப்பி வைத்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"அதன்­பின் என்­னைப் பட­ம் எடுக்­கக்­கூ­டாது என்று அவ­ரி­டம் சொன்­னேன்," என்­றார் இஸ­பெல்.

அதன்­பின் நண்­ப­கல் உணவு நேரத்­தின்­போது அவர் தம்­மைப் பின்­தொ­டர்ந்­த­தா­க­வும் தம்­மி­டம் பேச முற்­பட்­ட­தா­க­வும் இஸ­பெல் சொன்­னார்.

கடை­சி­யாக இவ்­வாண்டு ஏப்­ர­லில் தாம் அந்த ஆட­வரைக் கண்­ட­தாக அவர் சொன்­னார்.

அந்­தப் பாது­காப்பு இடை­வெளித் தூதர்­மீது புகார் அளிக்­கப்­பட்­ட­தைக் காவல்­துறை உறு­தி­செய்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரி­வித்­தது.

இதன் தொடர்­பில் என்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு விசா­ரித்து வரு­வ­தா­க­வும் அது முடிந்­த­பின் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சின் பேச்­சா­ளர் கூறி­னார்.