இணைய ஊடுருவல்: சுமார் 73,500 பேரின் தகவல் பாதிப்பு

இணைய ஊடுருவல்: சுமார் 73,500 பேரின் தகவல் பாதிப்பு

1 mins read
a6603623-f60d-4891-9d30-724abc96061f
-

சிங்­கப்­பூ­ரில் உள்ள ஒரு தனி­யார் கண் மருந்­த­கத்­தில் சிகிச்சை பெறும் கிட்­டத்­தட்ட 73,500 நபர்­ க­ளின் தனிப்­பட்­ட தக­வல்­களும் மருத்­து­வத் தக­வல்­களும் கணி­னிக் கட்­ட­மைப்­பைப் பாழ்­ப­டுத்­தும் இணைய ஊரு­ரு­வ­லில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

'ஐ அண்ட் ரெட்­டினா சர்­ஜன்ஸ்' (ஈஆர்­எஸ்) எனும் அந்த மருந்­த­கம் நேற்று இத்­த­க­வ­லைத் தெரி­வித்­தது. நோயா­ளி­க­ளின் பெயர்­கள், முக­வ­ரி­கள், அடை­யாள அட்டை எண்­கள், தொடர்பு எண்­கள், மருத்­து­வத் தக­வல்­கள் உள்­ளிட்­டவை ஊடு­ரு­வப்­பட்­டன.

எனினும் கடன்­பற்று அட்டை அல்­லது வங்­கிக் கணக்­குத் தக­வல்­கள் எவை­யும் ஊடு­ரு­வப்­ப­ட­வில்லை என்றது அந்த மருந்­த­கம்.

அந்­தத் தனி­யார் மருந்­த­கம், தனது கணி­ணிக் கட்­ட­மைப்பு முழு­மை­யாக சோதிக்­கப்­பட்டு, பாது­காப்­பான முறை­யில் மீட்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யது.

அத்­த­கைய ஊடு­ரு­வல் மீண்­டும் நிக­ழா­தி­ருக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று ஈஆர்­எஸ் மருந்­த­கம் சொன்­னது.

ஆகஸ்ட் 6ஆம் தேதி, ஊடு­ரு­வல்­கா­ரர்­க­ளுக்­குப் பணம் தந்தால்­தான் தக­வல்­க­ளைப் பயன்­ப­டுத்­த இயலும் வகையில் மிக­வும் நுணுக்­க­மான இணைய ஊடு­ரு­வ­லுக்கு மருந்­த­கம் உள்­ளா­னது.

மருந்­த­கத்­தின் கெம்­டன் கிளை பாதிக்­கப்­பட்­டபோதும் அதன் நொவீனா கிளை பாதிக்­கப்­ப­ட­வில்லை.