டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற புதிய வழிமுறைகள்

டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற புதிய வழிமுறைகள்

2 mins read
a18fd329-546d-4d1f-a8c1-d095cdf666de
முந்தைய டிரேஸ்டுகெதர் கருவியை 60 நாளுக்கு முன்பு பெற்றிருந்தால், இயந்திரம் வழி புதிய கருவியைப் பெற்றுக்கொள்ள முடியும். இன்னும் 60 நாள் ஆகவில்லை என்றால், ஊழியர் உள்ள முகப்புகளுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். படம்: அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்­கத்­துக்­கான அலு­வ­ல­கம் -

டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­யை முதல்­ மு­றை­யா­கப் பெறு­வோர், அவற்றை அஞ்சல் மூலம் பெறும் சேவைக்குப் பதிந்து கொள்ளலாம் என்று அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்­கத்­துக்­கான அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

அத்­து­டன், மாற்று டிரேஸ்டுகெதர் கருவிகளை வழங்க ஊழியர்கள் சேவையாற்றும் முகப்புகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு தானியங்கி விநியோக இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட கடைத்­தொ­கு­தி­களில் மாற்று டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை விநி­யோ­கிக்­கும் விநி­யோக இயந்­தி­ரங்­கள் இன்­று வைக்­கப்­பட்டுள்ளன. அதே போல் வரும் 30ஆம் தேதி­யி­லி­ருந்து அக்டோபர் மாத இறுதிக்குள் சமூக மன்­றங்­களில் இந்த இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­படும்.

இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­பட்ட பின்­னர் 17 கடைத்தொகுதிகளில் தற்­போ­து இயங்கிவரும் ஊழியர் உள்ள முகப்­பு­கள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் மூடப்­படும்.

சமூக மன்­றங்­களில் உள்ள ஊழியர் உள்ள முகப்­பு­கள் பின்­னொரு தேதி­யில் குறைக்­கப்­படும் என்று அலு­வ­ல­கம் கூறி­யது.

டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை முதன்­மு­றை­யா­கப் பெற்­றுக்கொள்­வோர், வீட்­டுக்கு அவற்றை அனுப்பி ­வைக்­கும் சேவையைப் பெற விரும்­பி­னால் தங்­கள் சிங்­பாஸ் கணக்­கைப் பயன்­ப­டுத்தி அச்­சே­வைக்­குப் பதிந்­து­கொள்­ள­லாம்: www.token.gowhere.gov.sg

டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­கள் அவர்­க­ளின் அஞ்­சல்­பெட்­டி­யில் சேர்க்கப்படும்.

ஏற்­கெ­னவே உள்ள டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை மாற்­று­வ­தற்கு இச்­சே­வை­யைப் பயன்­ப­டுத்த முடி­யாது.

முகக்­க­வ­சங்­க­ளை விநி­யோ­கிக்­கும் இயந்­தி­ரங்­களை டிரேஸ்­டு­கெ­தர் கரு­வி­களை விநி­யோ­கிக்­கும் இயந்­தி­ரங்­க­ளாக மாற்ற தெமா­செக் அற­நி­று­வ­னத்­து­டன் சேர்ந்து பணி­யாற்றி வரு­வ­தாக அறி­வார்ந்த தேசம், மின்­னி­லக்க அர­சாங்­கத்­துக்­கான அலு­வ­ல­கம் கூறி­யது.

கடந்த ஜூலை 26ஆம் தேதி நெக்ஸ், சன் பிளாஸா கடைத்­தொ­கு­தி­களில் அந்த இயந்­திா­ங்­கள் வைக்­கப்­பட்­டன. அதற்கு நல்ல வர­வேற்பு இருந்­த­தாக அலு­வ­ல­கம் கூறி­யது.

இத­னைத் தொடர்ந்து, சிங்­கப்­பூ­ரில் உள்ள 108 சமூக மன்­றங்­க­ளி­லும் அதி­க­மா­ன­வர்­கள் சென்­று­ வ­ரும் 40 கடைத்­தொ­கு­தி­க­ளி­லும் இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­ப­ட­வுள்­ளன.

ஒவ்வொரு இயந்திரத்திலும் 1,400 கருவிகள் வைக்கப்படும் என்றும் அவற்றில் மின்கலம் தீர்ந்த அல்லது செயல்டாத கருவிகளை புதிய கருவிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.