ஊழியருக்கு தொற்று; துப்புரவுப் பணிக்காக மூடப்பட்ட பூகிஸ் ஜங்ஷன் பிஎச்ஜி கடை

ஊழியருக்கு தொற்று; துப்புரவுப் பணிக்காக மூடப்பட்ட பூகிஸ் ஜங்ஷன் பிஎச்ஜி கடை

2 mins read
c01ee787-4b65-460d-ae53-a40e6aa2e3c8
-

பூகிஸ் ஜங்­ஷன் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள பிஎச்ஜி பகு­தி­வா­ரிக் கடை­யில் பணி­பு­ரி­யும் ஊழி­யர் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து துப்­பு­ர­வுப் பணி­க­ளுக்­காக அக்­கடை நேற்று மூடப்­பட்­டது.

அதனை நேற்று தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் அறி­வித்த பிஎச்ஜி, கடந்த செவ்­வாய்க் கிழ­மை­யன்று தனது ஊழி­யர்­களில் ஒரு­வ­ருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தா­கக் கூறி­யது.

"அவ­ரு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்த ஊழி­யர்­கள், தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு சளி/எச்­சில் பரி­சோ­த­னைக்­குச் செல்­லும்­படி நாங்­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ளோம்," என்று பிஎச்ஜி மேலும் கூறி­யது. அக்­கடை இன்று மீண்­டும் திறக்­கப்­படும் என்று அது சொன்­னது.

பூகிஸ் ஜங்­ஷன் கடைத்­தொ­கு­தி­யு­டன் தொடர்­பு­டைய 20 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக சுகா­தார அமைச்சு நேற்று முன்­தி­னம் அறி­வித்­தி­ருந்­தது.

அதி­கா­ரி­க­ளின் வழி­காட்­டு­தலுக்கு ஏற்ப தேவை­யான துப்­பு­ரவுப் பணி­களை பூகிஸ் ஜங்­ஷன் மேற்­கொண்டு வரு­வ­தாக அக்­க­டைத்­தொ­கு­தி­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் சொன்­னார்.

அக்­க­டைத்­தொ­கு­தி­யில் 'யக்­குன் காயா டோஸ்ட்' ரொட்­டிக் கடை­யில் பணி­யாற்­றும் கூங் வெய் ஹியோங் எனும் ஊழி­யர் ஒரு­வர், "இரு வாரங்­க­ளுக்கு ஒரு­முறை நாங்­கள் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­த­னைக்­குச் செல்­கி­றோம். எனவே, நில­வ­ரம் பற்றி எங்­க­ளுக்­குப் பெரி­தாக பதற்­றம் எது­வும் ஏற்­ப­ட­வில்லை," என்று கூறி­னார்.

"இன்று (புதன்­கி­ழமை) கடைத்­தொ­கு­தி­யில் மக்­கள் கூட்­டம் அதி­கம் இல்லை. கிரு­மித்­தொற்­றுக் குழு­மம் உரு­வெ­டுத்­துள்­ளது பற்றி செய்தி அறிந்து அவர்­கள் இங்கு வர அஞ்­சக்­கூ­டும்," என்­றார் அந்த ஊழியர்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பூகிஸ் ஜங்­ஷன் கடைத்­தொ­கு­தி­யில் உள்ள கடை­க­ளுக்­குச் சென்­ற­வர்­கள் அல்­லது அதன் வச­தி­க­ளைப் பயன்­ ப­டுத்­திய பொது­மக்­கள் இல­வ­சப் பரி­சோ­தனை செய்­து­கொள்­ள­லாம் என்று சுகா­தார அமைச்சு கூறியது.

அக்கடைத்தொகுதியில் புகுந்து அருகில் உள்ள கட்டடங்களுக்கு அல்லது பூகிஸ் எம்ஆர்டி நிலையத் துக்குச் சென்றவர்கள் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என்று அமைச்சு தெரிவித்தது.