மறைந்த மூத்த எழுத்தாளர் கா பெருமாளின் எழுத்துப் பிரதிகள் ஆவணக் காப்பகத்துக்கு நன்கொடை

மறைந்த மூத்த எழுத்தாளர் கா பெருமாளின் எழுத்துப் பிரதிகள் ஆவணக் காப்பகத்துக்கு நன்கொடை

3 mins read
cc96113d-52e6-449a-a45b-e75b48f93781
நன்கொடை அளிக்கப்பட்ட பிரதிகளில் திரு கா. பெருமாளின் கையெழுத்து அடங்கியுள்ள இப்பிரதியும் ஒன்று.படம்: திரு கா பெருமாள் குடும்பம்/ தேசிய ஆவணக் காப்பகம் -

இர்ஷாத் முஹம்மது

வானொலி படைப்­பு­கள், நாட­கங்­கள், கவி­தை­கள், கதை, என பல வழி­களில் தமது கருத்­து­களை வெளிக்­கொண்டு வந்த முன்­னோடி வானொலி படைப்­பா­ளரும் எழுத் தாளருமான மறைந்த திரு கா.பெரு­மா­ளின் ஆவ­ணங்­களை அவ­ரது குடும்­பத்­தி­னர் தேசிய நூலக வாரி­யத்­திற்­கும் தேசிய ஆவ­ணக் காப்­ப­கத்­திற்­கும் நன்­கொ­டை­யாக வழங்­கி­யுள்­ள­னர்.

கையெ­ழுத்­துப் பிர­தி­கள் முதல் அச்­சி­டப்­பட்ட நாடக வச­னங்­கள் வரை ஏரா­ள­மான அரிய ஆவ­ணங்­களை சமூ­கத்­தில் மேலும் பல­ரும் பார்த்து பலன் அடைய வழங்­கி­யுள்­ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சி கொண்­டார் திரு பெரு­மா­ளின் மூத்த மகன் திரு திருத்­தக்க தேவன்.

"என் அப்­பா­வின் மறை­விற்­குப் பிறகு பல முறை அவ­ரது படைப்­பு­களை ஆவ­ணப்­ப­டுத்­த­வேண்­டும் என்று நானே முற்­பட்­டுள்­ளேன். ஆனால் வேலைப் பளு கார­ண­மாக இது­வரை என்­னால் செய்ய முடி­யாத நிலை­யில் தேசிய நூலக வாரி­யம் முன்­வந்து இந்த அரிய படைப்­பு­க­ளைப் பெற்­றுக்­கொண்­டது மகிழ்ச்சி தரு­கிறது," என்­றார் அவர்.

"அவர் எழு­திய அனைத்­தை­யும் மிக­வும் தெளி­வான முறை­யில் அவர் அடை­யா­ளக் குறிப்­பு­டன் 'கேட்­ட­லாக்' செய்து வைத்­துள்­ளார்.

எழுதப்பட்ட தேதி முதற்­கொண்டு அனைத்­துத் தக­வல்­களையும் முறைப்படுத்தி வைத்­துள்­ளார்," என்று விளக்­கி­னார் திரு தேவன்.

தம்பி பிறந்­த­போது மருத்­து­வ­ ம­னை­யில் அம்மா இருந்­த­தால் தமது தந்தை கேல்­டி­காட் ஒளி­ப­ரப்­புக் கழ­கத்­திற்கு வேலைக்­குச் சென்­ற­போது கூடவே சேர்ந்து போன நினை­வு­க­ளைப் பகிர்ந்த அவர், கட­மை­யில் கட்­டுப்­பாட்­டு­ட­னும் நேர ஒழுங்­கில் கெடு­பி­டி­யா­க­வும் தந்தை இருப்­பார் என்­றார்.

அவ­ரி­டம் கற்­றுக்­கொண்­ட­வர்­கள் பலர் உள்­ள­னர் என்­றும் தமது 15 வய­தில் தந்தை மறைந்­த­தால் அவ­ரி­டம் நிறைய நேரத்தை செல­ விடாத குறை இன்­றும் உள்ளது என்று திரு தேவன் கூறினார்.

"ஒளிநாடாவில் என் அப்பா பதிவுசெய்­து வைத்த தமது வானொலிப் படைப்புகள் ஏரா­ளம் உள்­ளன. இதை எப்­ப­டி­யா­வது மின்­னி­லக்­கம் செய்­து­வி­ட­வேண்­டும்," என்று தமது வேட்­கை­யைப் பகிர்ந்­தார் தேவன். இந்த ஆண்டு திரு கா.பெரு­மா­ளின் நூற்­றாண்டு என்­ப­தை­யும் அவர் தெரி­வித்­தார்.

கொடை­யாக அளிக்­கப்­பட்ட ஆவ­ணங்­கள் மூலம் இளம் எழுத்­தா­ளர்­க­ளுக்கு ஊக்­க­மும் ஆக்­க­மும் கிடைப்­பதே அவ­ரது எண்­ணம்.

"என் தந்­தை­யின் ஆசை­யும் அது­வா­கத் தானே இருக்­கும். அவர் எழு­தி­ய­வற்­றை­யெல்­லாம் மக்­க­ளுக்­காக ஒலி­ப­ரப்பு மூலம் கொண்டு சென்­றார். மலா­யா­வில் கேம­ரன் மலைப் பகு­தி­யில் வளர்ந்த அவர், தோட்­ட­பு­றத்­தில் வேலை செய்­த­வர்­க­ளின் க‌ஷ்­டங்­க­ளைப் பார்த்து அவர்­க­ளின் உத்­வே­கத்­திற்­காக எழு­திய கவி­தை­கள் ஏரா­ளம்," என்­றார்.

நாள்­காட்­டி­யின் பின்­பு­றத்­திலோ கடி­தங்­க­ளின் உரை­க­ளிலோ எழு­திய சிறு கவிதை வரி­க­ளை­யும் அவர் சேகரித்து வைத்­துள்­ளதை சுட்­டிய திரு தேவன், அவை நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்ட ஆவ­ணங்­களில் அடங்­கி­யுள்­ளன என்­றார். 1940கள் தொடங்கி திரு பெரு­மாள் மறை­யும் வரை­யி­லான வர­லாற்­றுப் பதி­வு­கள் அவற்­றில் அடங்­கும்.

"என் தந்­தை­யின் படைப்­பு­களில் சமூக வர­லாற்­றின் பிர­தி­ப­லிப்பைக் காணலாம். கார­ணம் அவரது சமகால சூழ­லைக் கொண்டே அவர் தமது படைப்­பு­களை எழு­தி­யுள்­ளார். குறிப்­பாக அவ­ரது நாட்­டுப் பற்று படைப்­பு­கள் ஏரா­ளமமாக உள்ளன," என்­றார திரு திருத்தக்கதேவன்.

நாமக்­க­லில் பிறந்து மலாயா, சிங்­கப்­பூர் வானொ­லித் துறை­யில் தடம்­ப­தித்த நாத்­தி­க­ரான திரு பெரு­மாள், இந்து, முஸ்­லிம், கிறிஸ்­தவ சம­யங்­கள் குறித்த படைப்­பு­ க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.