கடந்த ஈராண்டுகளில், சுமார் 160 கொடையாளர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 27,000க்கும் அதிகமான பொருட்களை தேசிய நூலக வாரியத்துக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
கடந்த 1858ஆம் முதல் 1859ஆம் ஆண்டுவரை அச்சிடப்பட்ட பிந்தாங் திமோர் எனும் அரிய ஆங்கிலச் செய்திதாளின் பிரதியை அண்மையில் திரு ஜான் கோ, 66 வழங்கினார். சிங்கப்பூரின் நிலவியல், குடியிருப்புப் பேட்டைகளைப் பற்றிய சுமார் 7,000 புகைப்படங்களையும் அஞ்சல் அட்டைகளையும் திரு கோ கிம் சே கொடையாக அளித்தார்.
பத்தாண்டுக்கு மேலாக, உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாரியம் இத்தகைய பொருட்களை நன்கொடையாகப் பெற்றுவருகிறது. ஆவணக் காப்புக்குத் தேர்வாகும் பொருட்கள், பெரும் பாலும் சிங்கப்பூர், தென்கிழக்காசியா வுடன் தொடர்புடையவை. உயிர்வாயு நீக்கப்பட்டு, பூச்சிகளைக் கொல்ல நைட்ரோஜன் செலுத்துப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன.

