தேசிய தின அணிவகுப்பு: பங்கேற்பாளர்களுக்கு அதிபர் நன்றி

2 mins read
be791d92-f086-45b6-848f-4502966cb839
-

கொவிட்-19 சூழ­லால் ஏற்­பட்­டுள்ள சவால்­கள் பல. இருப்­பி­னும், கடு­மை­யாக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளுக்­கி­டையே தேசிய தின அணி­வ­குப்­பின்­போது சிங்­கப்­பூ­ரர் என்ற உணர்வை வெளிப்­ப­டுத்­திய பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு அதி­பர் ஹலிமா யாக்­கோப் நேற்று தம் நன்­றி­யைத் தெரி­வித்­தார்.

பல­ரது மன­தைக் கவர்ந்­த­து­டன் உணர்ச்­சி­க­ளைத் தூண்­டிய ஒரு கொண்­டாட்­ட­மாக, சென்ற சனிக்­கி­ழமை நடந்த நிகழ்வு இருந்­த­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றின் பிடி­யில் இருந்­தா­லும் மீள்­தி­ற­னைத் தொடர்ந்து வளர்த்­துக்­கொண்டு சிங்­கப்­பூ­ரர்­கள் நடை­போட வேண்­டும் என்ற நம்­பிக்­கையை மக்­கள் அணி­வ­குப்­பின் மூலம் பெற்­றி­ருப்­பர் என்ற தம் விருப்­பத்­தை­யும் அதி­பர் தெரி­வித்­தார்.

"ஒன்­று­பட்ட மீள்­தி­றன், உறுதி, ஒற்­றுமை ஆகி­ய­வற்றை இது­போன்ற சவால்­மிக்க தரு­ணங்­க­ளின்­போ­தும் சிங்­கப்­பூ­ரர்­கள் வெளிப்­ப­டுத்­து­கின்­ற­னர். நமது சிங்­கப்­பூர் உணர்­வுக்கு இதுவே ஓர் உதா­ர­ணம். இதை நாம் கொண்­டாட வேண்­டும். இதை எண்ணி நாம் பெரு­மை­கொள்ள வேண்­டும்," என்­றார் அவர்.

'எஸ்ஜி எனே­பல்', 'மைன்ட்ஸ்' ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த கலை­ஞர்­கள் உட்­பட அணி­வ­குப்­பில் பங்­கேற்ற அனை­வ­ரு­ட­னும் மெய்­நி­கர் சந்­திப்பு ஒன்றை அதி­பர் ஹலிமா நேற்று நடத்­தி­னார்.

அணி­வ­குப்­பில் வெவ்­வேறு பிரி­வி­னர் இணைந்­தது தமக்கு மகிழ்ச்சி அளித்­த­தா­க­வும் திரு­வாட்டி ஹலிமா குறிப்­பிட்­டார்.

"நாம் குறை­க­ளைப் பார்ப்­ப­தில்லை. நிறை­க­ளைப் பார்க்­கி­றோம். அப்­ப­டிப் பார்க்­கும்­போது அவர்­கள் மிகுந்த திற­மை­சா­லி­கள்," என்று 'மைன்ட்ஸ்' அமைப்­பைச் சேர்ந்த கலை­ஞர்­களை அவர் பாராட்­டி­னார்.

சவால்­களை எதிர்­கொண்டு தங்­க­ளின் குடும்­பத்­துக்­கா­க­வும் சமூ­கத்­திற்­கா­க­வும் வாழ்க்கை மேம்­பட பாடு­பட்ட டேசி வைத்­தி­லிங்­கம், ஸுபீர் சாயட், டான் கியோக் ஹாக் ஆகிய மூன்று சிங்­கப்­பூ­ரர்­க­ளைப் பற்­றி­யும் அதி­பர் பாராட்­டிப் பேசி­னார்.

'மைன்ட்ஸ்' அமைப்பை நிறு­வி­யோ­ரில் திரு­வாட்டி டேசி­யும் ஒரு­வ­ரா­வார்.

"ஒவ்­வோர் ஆண்­டும், சிங்­கப்­பூ­ரர் என்­றால் என்ன என்­பதை நாம் எண்­ணிப் பார்க்­கும் முக்­கிய தரு­ண­மாக தேசிய தினம் இருந்து வரு­கிறது. நாம் நினைத்­த­தில் சில­வற்றை கொவிட்-19 இவ்­வாண்டு தடுத்­தி­ருக்­க­லாம். ஆனால் நாம் விடா­மல் நடை­போட்­டோம்," என்­றார் அவர்.