வெளிநாட்டு மேலாளர்களுக்கான சலுகைகள், சம்பளம் தொடர்பான செலவுகள் குறைந்தன

சிங்­கப்­பூ­ரில் உள்ள நிறு­வ­னங்­கள் கடந்த ஆண்­டில் மத்­திய நிலை­யில் பணி­யாற்­றும் வெளி­நாட்டு மேலா­ளர்­க­ளுக்­குச் சலு­கை­கள் குறைப்பு, சம்­ப­ளக் குறைப்பு போன்­ற­வற்­றால் ஒட்­டு­மொத்த சம்­ப­ளத் தொகுப்­புக்­காக குறைந்த அள­வி­லேயே செலவு செய்­துள்­ளன.

எனி­னும், வெளி­நாட்­ட­வர்­களுக்கு ஆக அதி­க­மான ரொக்க சம்­ப­ளம் வழங்­கும் நாடு­களில் சிங்­கப்­பூர் ஐந்­தா­வது இடத்­தைப் பிடித்­துள்­ள­தாக தரவு, தக­வல் வழங்­கும் நிறு­வ­ன­மான 'ஈசிஏ இன்­டர்­நே­ஷ­னல்' நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

மத்­திய நிலை­யில் பணி­யாற்­றும் வெளி­நாட்­ட­வ­ருக்­கான சரா­சரி ஊதி­யத் தொகுப்பு கடந்த ஆண்டு யுஎஸ் $225,171 (305,400 சிங்­கப்­பூர் வெள்ளி) ஆக இருந்­தது. இது முந்­தைய ஆண்­டை­விட சுமார் யுஎஸ் $7,300 குறைவு.

வெளி­நாட்­ட­வரை வேலைக்கு அனுப்ப உல­க­ள­வில் 17வது செல­வு­மிக்க நக­ர­மாக சிங்­கப்­பூர் உள்­ளது.

'ஈசிஏ இன்­டர்­நே­ஷ­னல்' நிறு­வ­னத்­தின் ஆசி­யா­வுக்­கான வட்­டார இயக்­கு­ந­ரான திரு லீ குவேன், சிங்­கப்­பூ­ரின் குறைந்­துள்ள வெளி­நாட்­டி­ன­ருக்­கான சம்­ப­ளத் தொகுப்பு ஹாங்­காங், தாய்­லாந்து போன்ற மற்ற இடங்­க­ளி­லும் உள்ள சரி­வு­க­ளைப் பிர­தி­ப­லிக்­கின்­றன என்று குறிப்­பிட்­டார்.

தங்­கு­மி­டம் மற்­றும் பிற சலு­கை­க­ளின் குறைந்த செல­வு­கள் இச்­ச­ரி­வுக்­குக் கார­ணம்.

எனி­னும், 2019ல் தங்­கள் சகாக்­கள் வாங்­கி­ய­தை­விட ரொக்க சம்­பளத்­தில் சுமார் யுஎஸ் $1,000 குறை­வாக தற்­போது இவர்­கள் சம்­பா­திக்­கி­றார்­கள் என்­றார் திரு லீ.

"உல­க­ளா­விய அள­வில் சிறந்த வாழ்க்­கைத் தரத்­து­டன் (ஈசிஏ-வின் வசிப்­பிட மதிப்­பீ­டு­க­ளின்­படி) தர­வ­ரிசை முன்­னி­லை­யும் இணைந்து, சிங்­கப்­பூர் வெளி­நாட்­டி­னரை இந்த வட்­டா­ரத்­துக்கு ஈர்க்­கிறது," என்று திரு குவான் குறிப்­பிட்­டார்.

2020ஆம் ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில் 160 நாடு­களில் 300க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­களை இது ஆய்வு செய்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!