தங்கையைப் பழிவாங்கிய அண்ணனுக்குச் சிறை

தங்கையைப் பழிவாங்கிய அண்ணனுக்குச் சிறை

1 mins read
08dc3f30-508e-4f29-8ffc-a64e52adb680
-
Google News Preferred Icon

150 வெள்­ளி­யை தனக்கு திரும்­பக் கொடுக்­கா­த­தால் தங்­கை­யின் மன­நல சிகிச்சை குறித்த தக­வல்­களை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்ட அண்­ண­னுக்கு எட்டு மாதங்­கள், 12 வார்ம சிறைத் தண்டனை­யும் 2,500 வெள்ளி அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன. அதோடு, வர­வு­செ­ல­வுத் திட்­டம் 2020ல் தங்­கைக்கு வழங்­கப்­பட்ட மளி­கைப் பொருள் பற்­றுச்­சீட்­டு­களை­யும் அவ­ரின் அஞ்­சல் பெட்டி­யி­லி­ருந்து அவர் திரு­டி­யிருக்­கிறார்.

தங்கையின் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணச் சீட்டின் படத்தை 36 வயது சியாஹ்ரெல் முகமது இன்ஸ்டகிராமில் வெளியிட்டார். படத்திற்குக் கீழ் தங்கையின் மனநிலையைக் கேலி செய்து அவர் கருத்துகளையும் பதிவுசெய்தார்.

அப்போது அவரின் தங்கை மனநலக் கழகத்தில் சிகிச்சை பெற்றுவந்தார்.

வேண்­டு­மென்றே மன­வு­ளைச்­சலை அளித்­தது, அவ­ச­ரப்­பட்டு உயி­ருக்கு ஆபத்து ஏற்படும் வகை­யில் நடந்­து­கொண்டது, பய­மு­றுத்­தும் வகை­யில் மிரட்டியது, திருட்டு உட்­பட ஏழு குற்­றச்­சாட்­டு­களை சியாஹ்­ரெல் நேற்று ஒப்­புக்­கொண்­டார்.

சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதியன்று மற்றொரு சம்பவத்திலும் சியாஹ்ரெல் ஈடுபட்டிருந்தார். அவருக்கும் ஒரு நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் சியாஹ்ரெல் அந்நபரின் சைக்கிளின் முன் சக்கரத்தைப் பூட்டியிருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து சைக்கிளை ஓட்ட முயன்ற நபர் கீழே விழுந்ததால் அவரின் காலில் காயமுற்றது. ஆனால் அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை.