புக்கிட் பாத்தோக்கில் உள்ள வர்த்தகப் பகுதி ஒன்றில் 11 பெண்களும் 10 ஆண்களும் ஒன்றுகூடி சூதாடியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அங்கு காவல்துறையினர் நடத்திய சோதனையில் இது தெரியவந்தது. அவர்களில் ஒரு 42 வயது பெண்ணும் 39 வயது ஆணும் அப்பகுதியை விளையாட்டுக் கூடமாகப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
மற்றவர்கள் 29லிருந்து 67 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சோதனையில் சூதாட்டம் தொடர்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொவிட்-19(தற்காலிக நடவடிக்கைகள்) (கட்டுப்பாட்டு ஆணை) விதிமுறைகள் 2020 சட்டத்தின்கீழ் பாதுகாப்பு தூர இடைவெளி விதிமுறைகளை மீறியதன் தொடர்பில் பிடிபட்ட 21 பேர் மீதும் விசாரணை நடத்தப்படும். குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு அதிகபட்சமாக 10,000 வெள்ளி அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சட்டவிரோதமாக ஓர் இடத்தை விளையாட்டுக் கூடமாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்ாலும் தண்டனைகள் விதிக்கப்படலாம்.

