கெப்பல் பே பகுதியில் 5ஜி பாதுகாப்பு

கெப்பல் பே பகுதியில் 5ஜி பாதுகாப்பு

1 mins read
7ab5c8ac-25e0-4489-a68a-33635628e157
கெப்பல் பே நீர்முகப்புப் பகுதியில் அமைந்துள்ள 5ஜி கண்காணிப்பு கேமரா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கெப்­பல் பே நீர்­மு­கப்பு, பட­கோட்­டப் பகு­தி­யில் 5ஜி கைபேசி கட்­ட­மைப்­பில் இயங்­கும் கண்­கா­ணிப்பு எந்திரனியல் கருவி, கேமரா ஆகியவை பொருத்­தப்­பட்­டுள்­ள­தாக எம்1 தொலைத்­தொ­டர்பு நிறு­வ­ன­மும் கெப்­பல் லேண்ட் சொத்து நிறு­வ­ன­மும் தெரி­வித்­துள்­ளன.

கெப்­பல் பேயில் இடம்­பெ­றும் இக்கரு­வி­களும் அவற்றின் தொடர்பிலான இதர அம்சங்களும், வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ள முதல் 5ஜி தொழில்­நுட்ப அம்­சங்­களில் சில. அதோடு, அடிப்­படை கைபேசி பயன்­பாட்டை மேம்­ப­டுத்­து­வ­தை­யும் தாண்டி இப்­போது மற்ற செயல்­பா­டு­க­ளுக்­கும் 5ஜி கட்­ட­மைப்பு உப­யோ­கிக்­கப்­ப­டுகிறது.

எம்1 நிறு­வ­னத்­தின் 5ஜி கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்­தும் எந்திரனியல் கருவி, கெப்­பல் பே வளாகத்தை ஊழி­யர்­கள் நேரில் இல்­லா­மல் கண்­கா­ணிக்க உத­வும். விருந்­தி­னர்­க­ளுக்கு டாக்­சி­களை ஏற்­பாடு செய்து தரு­வது போன்ற மற்ற சில செயல்­க­ளி­லும் அது கைகொடுக்கும்.

அனு­ம­தி­யில்­லாத பட­கு­கள் வந்தால் அவற்றை அடை­யா­ளம் கண்டு ஊழி­யர்­க­ளுக்­குத் தெரியப்­படுத்த 5ஜி கண்­கா­ணிப்பு கேமரா ஒன்­றும் கெப்­பல் பேயில் பொருத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கேமரா, பட­கு­க­ளை­யும் கப்­பல்­க­ளை­யும் அடை­யா­ளம் காண­வும் ஆரா­ய­வும் தானி­யக்க முறை­யைப் பயன்­ப­டுத்­து­கிறது.