பேருந்து மோதி பாதசாரி மரணம், ஓட்டுநர் கைது

பேருந்து மோதி பாதசாரி மரணம், ஓட்டுநர் கைது

1 mins read
52f514dd-945e-475f-a1db-8680afccc125
-

அங் மோ கியோ அவென்யூ மூன்றில் எஸ்­பி­எஸ் நிறு­வ­னத்­தின் எஸ்­பி­எஸ் பேருந்து மோதி­ய­தால் 46 வயது பெண் ஒருவர் உயி­ரி­ழந்­தார். கவனமின்றி வாகனத்தை ஓட்டி மர­ணத்தை விளை­வித்­த குற்றத்தின் பேரில் பேருந்­தின் 56 வயது ஓட்­டு­நர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.

மாண்ட பெண் பேருந்தின் பின் சக்­க­ரத்­திற்­குக் கீழ் சிக்­கி­யி­ருந்­தார். சிங்கப்பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் அவரை மீட்­ட­னர். சம்­பவ இடத்­தி­லேயே அவர் உயிரிழந்ததை மருத்­துவ உத­வி­யாளர் ஒரு­வர் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

சம்பவம் குறித்து நேற்று காலை சுமார் ஆறே முக்கால் மணிக்கு தங்களுக்குத் தகவல் வந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்­ப­வம் குறித்­துத் தாங்­கள் மிக­வும் வருத்­தப்­ப­டு­வ­தா­க­வும் ஆழ்ந்த அனு­தா­பங்­க­ளைத் தெரி­வித்து உதவி வழங்­க­வும் மாண்ட பெண்­ணின் உற­வி­னர்­கள், அவ­ருக்கு நெருங்­கி­ய­வர்­கள் ஆகி­யோ­ரைத் தொடர்­பு­கொள்ள முயற்சி எடுத்­து­வ­ரு­வ­தா­க­வும் எஸ்­பி­எஸ் டிரான்­சிட் நிறு­வ­னம் தெரி­வித்­தது.

விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.