'கோல்ட் ஸ்டோரேஜ்' பேரங்காடிக் குழுமம், பேரகான் கடைத்தொகுதியில் தனது புதிய முக்கியக் கிளையைத் திறந்துள்ளது.
அதன் பெயர் 'சிஎஸ் ஃப்ரெஷ்' என்று மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்பகுதியில் 'கோல்ட் ஸ்டோரேஜ்' குழுமத்தின் மற்றொரு கடையான 'மார்க்கெட் பிளேஸ்' அமைந்திருந்தது. சிங்கப்பூரின் அனைத்து 'மார்க்கெட் பிளேஸ்' கடைகளும் 'சிஎஸ் ஃபிரெஷ்' எனப் பெயர் மாற்றம் காணும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது. பெரும்பாலும் கூடுதல் விலையில் உள்ள பொருட்கள் இவற்றில் விற்கப்படும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 'கோல்ட் ஸ்டோரேஜ்' தனது அனைத்து 48 பேரங்காடிகளையும் மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ளது.
40 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள அத்திட்டத்தின்கீழ் பேரகானில் முக்கியக் கிளை திறக்கப்பட்டுள்ளது.

