4.7 மில்லியன் வெள்ளியைக் கையாடியவருக்கு சிறை

4.7 மில்லியன் வெள்ளியைக் கையாடியவருக்கு சிறை

2 mins read
e4fc1e59-ea70-4878-9c13-3fccd5112bfc
-

பல­ருக்­குச் சொந்­த­மான பணத்­தைக் தவறாகக் கையாடல் குற்­றத்­திற்­காக சான்­று­பெற்ற பொதுக் கணக்­காய்­வா­ளர் ஒரு­வ­ருக்கு ஆறு ஆண்­டு சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

40 ஆண்­டு­க­ளுக்­கும் மேல் பொதுக் கணக்­காய்­வா­ள­ராக இருந்த 77 வயது ஜெரி லீ கியென் எங், 4.7 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான தொகை­யைக் களவாடியிருக்­கி­றார்.

அவர் கள­வா­டி­ய­தில் மாண்ட ஒரு­வ­ரின் சொத்­தும் அடங்­கும். கள­வா­டியதில் பெரும்­பங்கை லீ பிலிப்­பீன்­சில் உள்ள வங்­கிக் கணக்கு­க­ளுக்கு அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

வெளி­நா­டு­களில் தனக்­கி­ருந்த முத­லீட்­டுத் திட்­டங்­க­ளுக்­குக் கட்டணம் செலுத்­த பிறர் அவரிடம் நம்பி ஒப்­ப­டைத்த பணத்தை லீ பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.

முத­லீட்­டுத் திட்­டங்­கள் என்ற பெய­ரில் லீ பல கால­மாக ஏமாற்றப்­பட்­ட­தா­க­வும் அவற்­றி­லி­ருந்து அவர் எந்­தப் பணத்­தை­யும் பெற­வில்லை என்­றும் மாவட்ட நீதி­பதி மார்­வின் பே கூறி­னார்.

லீ சில மன­ந­லப் பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­க­வும் அத­னால் அவர் சரி­யான முடி­வு­களை எடுக்­க­வில்லை என்­றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

லீயுடன் ஒரு முறை சேர்ந்து கையாயடலில் ஈடுபட்ட அவரது துணைவியான 74 வயது எலிசன் சீ லே எங்கிற்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இரு­வ­ரின் கள­வா­டச் செயல்­களும் 2016ஆம் ஆண்­டில் முதன்­மு­த­லில் வெளி­வந்­தன.

மோச­டிச் செயல்­கள் 2014ஆம் ஆண்­டுக்­கும் 2017ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நிகழ்த்­தப்­பட்­டன.

பிணை­யில் விடு­விக்­கப்­பட்ட இரு­வ­ருக்­கும் வரும் அக்­டோ­பர் மாதம் எட்­டாம் தேதி­யி­லி­ருந்து சிறைத் தண்­ட­னையை நிறை­வேற்று­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. நம்பிக்கை மோசடிக் குற்றம் புரிந்தவருக்கு அதிகபட்சமாக ஏழாண்டுச் சிறைத் தன்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.