பெண் நோயாளி ஒருவரை மானபங்கம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் மூத்த மருத்துவர், நீதிமன்றத்தில் இன்று விசாரிக்கப்பட்டார்.
70 வயது சுவா கீ லோய், கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டார். மானபங்கக் குற்றச்சாட்டு ஒன்றையும் அவர் எதிர்நோக்குகிறார்.
ஈசூன் அவென்யூ 3ல் உள்ள 'சுவா கிளினிக் அன்ட் சர்ஜரி' மருந்தகத்தில் இரவு 7.30 மணிக்கு அவர், அந்தப் பெண்ணின் வலது கண்ணத்தையும் மார்பகத்தையும் தமது இடது கையால் தீண்டினார்.
இந்த மருத்துவருக்கு 10,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.
மானபங்க குற்றத்திற்காக ஈராண்டு வரையிலான சிறைத்தண்டனையும் அபராதம் மற்றும் பிரம்படி விதிக்கப்படலாம். 50 வயதுக்கும் அதிகமான சுவாவுக்கு பிரம்படி விதிக்கப்பட முடியாது.

