கொவிட்-19: சமூகத்தில் புதிதாக 112 பேர் பாதிப்பு

கொவிட்-19: சமூகத்தில் புதிதாக 112 பேர் பாதிப்பு

1 mins read
e609a1ec-2c41-4ca7-a30f-f503a9fed084
-

சிங்கப்பூரில் புதிதாக 112 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று மதியம் தகவல் வெளிவந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டோரில் நாற்பது கிருமித்தொற்றுகள் புகிஸ் ஜங்ஷன் கடைத்தொகுதி கிருமித்தொற்றுடன் தொடர்புடையவை. எஞ்சிய 72 பேரில் 31 பேர் முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நேரத்தில் 17 பேர் தனிமைப்படுத்தப்படவில்லை.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு நான்கு பேர் கிருமித்தொற்றுடன் வந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது. இவர்களில் மூவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது. ஒருவர் வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்ற வந்தபோது அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிற்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் பதிவான மொத்த கிருமித்தொற்றுச் சம்பவங்கள் 66, 928 ஆக பதிவாகியுள்ளது.