'சமய உணர்வை வலுப்படுத்த புது வழிகள் தேவை'

'சமய உணர்வை வலுப்படுத்த புது வழிகள் தேவை'

3 mins read
d16bde7e-879b-48cc-93a7-96d3096f2db9
சிங்கப்பூரின் அனைத்துச் சமய மன்றத்தின் 10 சமயங்களையும் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை ஒன்றில் நேற்று ஈடுபட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எஸ்.வெங்­க­டே­‌‌‌ஷ்­வ­ரன்

உல­கம் முழு­வ­தும் நன்மை விளை­வ­தற்­கான முக்­கிய சக்­தி­யாக பிர­தான சம­யங்­கள் இருந்து வரு­கின்­றன. நற்­பண்­பு­களை அவை கற்­பித்­துப் பல சமு­தா­யங்­க­ளைப் பய­னுள்­ள­வை­யா­கச் செதுக்­கி­யுள்­ளன. ஆனால், மனித வர­லாற்­றில் தவறு நேரக் கார­ண­மா­க­வும் சம­யம் இருந்­துள்­ளது என்­றார் துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட்.

"வெறுப்­பு­ணர்­வை­யும் பயங்­க­ர­வா­தச் சிந்­த­னை­யை­யும் பரப்­பு­வோர், சம­யத்­தைத் தவ­றாக பயன்­ப­டுத்து­கின்­ற­னர். அவர்­க­ளின் தீவி­ர­வாத, தனிப்­பட்ட சிந்­த­னை­கள் இணை­யத்­தில் பர­வி­வி­டு­கின்­றன.

"கண்­கா­ணிக்­கா­மல் விட்­டு­விடும்­போது பல முறை இவை சுய தீவி­ர­வா­தச் சிந்­த­னைக்­கும் பயங்­க­ர­வா­தச் சம்­ப­வங்­க­ளுக்­கும் வழி­வகுத்­துள்­ளன," என்­றார் திரு ஹெங்.

லோரோங் கூ சாய் ‌‌ஷங் ஹோங் கோயில் சங்­கத்­தில் நேற்று நிகழ்ந்த சிங்­கப்­பூ­ரின் அனைத்­துச் சமய மன்­றத்­தின் (ஐஆர்ஓ) 72வது நினைவு தினத்­தில் சிறப்பு விருந்­தி­ன­ராக கலந்­து­கொண்டு பேசி­னார் திரு ஹெங்.

சம­யம் இல்­லா­த­வர்­க­ளின் விகி­தம் கடந்த பத்­தாண்­டு­களில் 3% அதி­க­ரித்­துள்­ளது என்­றும் 15 வய­தி­ன­ரும் அதற்கு மேற்­பட்ட சிங்­கப்­பூ­ரர்­க­ளி­லும் இப்­பி­ரி­வி­னர் 20 விழுக்­காட்­டாக உள்­ள­னர் என்­றும் தெரி­வித்­தார் திரு ஹெங்.

இது ஒரு சிறிய குழு அல்ல என்று குறிப்­பிட்ட அவர், சம­யங்­களுக்கு இடையே நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­பது மட்­டு­மன்றி சமு­தா­யத்­தின் வெவ்­வேறு பிரி­வு­க­ளுக்கு இடை­யே­யும் நல்­லி­ணக்­கம் இருப்­பது இன்­றி­ய­மை­யா­தது என்­றார்.

"கருணை, மரி­யாதை, புரிந்­து­ணர்வு போன்ற பண்­பு­ந­லன்­கள் அனைத்து சம­யங்­க­ளுக்­கும் அடிப்­படை­யாக உள்­ளன. சம­யத்­தைப் பின்­பற்­று­ப­வ­ராக இருந்­தா­லும் இல்­லா­விட்­டா­லும் இந்த அடிப்­ப­டைப் பண்­பு­ந­லன்­களை நாம் போற்றி வலுப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்," என்­றார் அவர்.

தமக்கு 2016ஆம் ஆண்­டில் பக்­க­வா­தம் ஏற்­பட்­ட­போது ஐஆர்ஓ சம­யத் தலை­வர்­கள் ஒன்று திரண்டு, தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்த அவர் குண­ம­டை­வ­தற்­காக பிரார்த்­தனை செய்த சம்­ப­வத்­தை­யும் நேற்று நினை­வு­கூர்ந்­தார் துணைப் பிர­த­மர் ஹெங்.

நிகழ்­வில் கலா­சார, சமூக, இளை­யர்­துறை அமைச்­சர் எட்­வின் டோங், ஓய்­வு­பெற்ற கௌரவ மூத்த அமைச்­சர் கோ சோக் டோங், ஐஆர்ஓ அமைப்­பின் தலை­வர் டான் தியாம் லாய் ஆகி­யோ­ரும் கலந்து­கொண்டு சிறப்­பித்­த­னர்.

இவ்­வாண்டு பொது­நல அறக்­கொடை அமைப்­பு­க­ளுக்­கான அங்கீ­கா­ரத்தை ஐஆர்ஓ பெற்­றுள்­ளது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

சமூக பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­ற­வும் பொது­மக்­க­ளு­டன் அதன் தொடர்பை வலுப்­ப­டுத்­திக்­கொள்­ள­வும் 'ஐஆர்­ஓ­வின் நண்­பர்­கள்' என்ற திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது.

'ரோசஸ் ஆஃப் பீஸ்', 'ஒன்­பீப்­பள்.எஸ்ஜி', 'ஃபார் ஈஸ்ட் அமைப்பு', 'தை ஹுவா குவான் ஒழுக்க சமு­தா­யம்' ஆகிய நான்கு அமைப்­பு­களும் இத்­திட்­டத்­தின் முதல் நான்கு உறுப்­பி­னர்­க­ளாக அறி­விக்­கப்­பட்­டன. அத்­து­டன் சிங்­கப்­பூர் பெண்­க­ளைக் கொண்­டா­டும் இந்த ஆண்­டில் 'நம்­பிக்கை கொண்ட பெண்­கள்' என்ற சிறு புத்­த­க­மும் வெளி­யி­டப்­பட்­டது.

இவ்­வாண்­டுக்­கான ஐஆர்ஓ விரு­தைப் பெற்ற சிஸ்­டர் மரியா லாவ், துணைப் பிர­த­மர் ஹெங்­கு­டன் இணைந்து இந்­தப் புத்­த­கத்தை வெளி­யிட்­டார்.

இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் 1949ஆம் ஆண்­டில் ஐஆர்ஓ நிறு­வப்­பட்­டது. ஆறு சம­யங்­க­ளு­டன் தொடங்­கிய இந்த மன்­றம், 10 சம­யங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக இன்று விளங்­கு­கிறது. பல தலை­மு­றை­க­ளாக சிங்­கப்­பூ­ரில் நிம்­ம­தி­யை­யும் சமய நல்­லி­ணக்­கத்­தை­யும் நிலை­நாட்ட முக்­கிய முயற்­சி­களை இந்த மன்­றம் எடுத்து வரு­கிறது.