'குடும்பத்தாருடன் வசித்தாலும் மூத்தோர் தனிமையை உணரலாம்'

'குடும்பத்தாருடன் வசித்தாலும் மூத்தோர் தனிமையை உணரலாம்'

1 mins read
d0e1e1d4-2d3d-4bdb-8916-c8d4a321daae
-

குடும்­பத்­தா­ரு­டன் வசித்து வரும் முதி­ய­வர்­கள், சுற்­றி­யும் ஆட்­கள் இருந்­தாலும்­கூட சமூக அள­வில் தனி­மையை உண­ரக்­கூ­டும் என்று புதிய ஆய்வு ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது.

சமூ­கத் தொடர்­பற்ற உணர்வு தங்­க­ளுக்கு ஏற்­பட்­ட­தாக குறிப்­பிட்­டி­ருந்த 1,021 மூத்­தோ­ரில், குடும்­பத்­தா­ரு­டன் வசிப்­போர் 804 பேர். உற­வி­னர்­கள் அல்­லது நண்­பர்­களு­டன் வசிப்­போர் 70 பேர் மற்­றும் தனித்து வாழ்­ப­வர்­கள் 147 பேர் என்று ஆய்வு தெரி­வித்­துள்­ளது.

சமூ­கத் தொடர்­பின்­மையை உணர்­வோ­ரில் பாதிக்கு மேற்­பட்­டோர், தங்­க­ளுக்கு உதவி தேவைப்­பட்­டால் அணுக யாரு­மில்லை என்று ஆய்வு கூறி­யது.

"சமூக ரீதி­யில் ஓர் இணைப்பு இல்­லாத நிலைக்­கும் தனித்து வாழ்­வ­தற்­கும் பொது­வாக தொடர்பு இருக்­கும். ஆனால், சமூ­கத் தொடர்­பின்­மையை உணர்ந்த பெரும்­பாலா­னோர், தங்­கள் குடும்­பத்­தா­ரு­டன் வாழ்­ப­வர்­க­ளாக உள்­ள­னர்," என்­றார் ஆய்­வின் தலைமை ஆய்­வாளர் பேரா­சி­ரி­யர் கோ வூன் புவே.

ஆய்­வுக்­காக 16,943 மூத்­தோரி­ட­மி­ருந்து பெறப்­பட்ட தர­வு­கள் பயன்­படுத்­தப்­பட்­டன. ஆய்­வில் பங்­கேற்­றோ­ரின் சரா­சரி வயது 73.

இந்த அண்­மைய ஆய்­வுத் தரவு, அனைத்து இனங்­க­ளுக்­கும் பொருந்­தும் என்­றார் பேரா­சி­ரி­யர் கோ.

தனி­யாக வாழ்­வோ­ரில், பெண்­களைக் காட்­டி­லும் சமூ­கத் தொடர்­பின்­மையை உண­ரும் சாத்­தி­யம் ஆண்­க­ளுக்கு இரு­ம­டங்கு என்­றும் ஆய்வு கூறு­கிறது.

சிங்­கப்­பூ­ரில் மூப்­ப­டை­யும் சமூ­க­மும் தனித்து வாழும் மூத்­தோ­ரும் அதி­க­ரித்து வரும் நிலை­யில், வருங்­கா­லத்­தில் சமூ­கத் தொடர்­பின்மை மேலும் பெரிய சிக்­க­லாக உரு­வெடுக்­கும் என்­ப­தற்கு இந்த ஆய்வு ஒரு நினை­வு­றுத்­தல் என்­றார் பேரா­சி­ரி­யர் கோ.