'சிங்பாஸ்' கொண்டு இயந்திரத்தில் மது வாங்கலாம்

'சிங்பாஸ்' கொண்டு இயந்திரத்தில் மது வாங்கலாம்

1 mins read
bd38988e-2df1-4e17-911d-66835a63ab60
-
Google News Preferred Icon

அரசாங்கச் சேவைகளை இணையம்வழி பயன்படுத்த 'சிங்பாஸ்' தேவைப்படுகிறது. இனி 'சிங்பாஸ்' கொண்டு 'செல்லர்பிரேஷன்' நிறுவனத்தின் மூன்று புதிய இயந்திரங்களிலிருந்து மதுபானமும் வாங்க முடியும். இயந்திரங்கள் மீதுள்ள 'கியூஆர்' குறியீட்டை, 'சிங்பாஸ்' செயலியுடன் வருடி 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர் என்பதை உறுதிசெய்தால் விரும்பிய மதுபானத்தைத் தெரிவு செய்யலாம். ஆறு கிளைகளுடன் மதுபான விநியோகத்திற்காக இணையத்தளம் ஒன்றையும் 'செல்லர்பிரேஷன்' இயக்கி வருகிறது. நிறுவனம் அதன் இயந்திரத் திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளது.