ஜியா ஜியா, காய் காய் பாண்டா கரடிகள் சிங்கப்பூர் வந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அவற்றுக்குக் குட்டி ஒன்று பிறந்தது.
இதையடுத்து, குட்டிக்கு இரண்டு வயதாகும்போது, அது சீனாவுக்குத் திருப்பித் தரப்படும் என்று கூறப்பட்டது.
சீனாவின் இனப்பெருக்க விலங்குகளுடன் அது சேர்ந்து எதிர்காலத்தில் தன் சொந்த இனப்பெருக்க முயற்சியில் இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், குட்டியின் பெற்றோரைத் தொடர்ந்து சிங்கப்பூரில் வைத்திருக்க, சீனாவுடன் சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, பாண்டா குட்டி ஆணா, பெண்ணா என்பதை இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்களில் தெரிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
குட்டி பிறந்து 100 நாட்கள் நிறைவடையும்போது, அதற்குப் பெயர் சூட்ட உதவுவதற்காக பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜியா ஜியா மற்றும் அதன் குட்டியின் நடவடிக்கைகளை அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள், வனவிலங்கு காப்பகத்தின் 'யூடியூப்' தளத்தைப் பார்வையிடலாம்.

