'எஸ்ஜி இக்கோ': விண்ணப்பங்கள் வரவேற்பு

'எஸ்ஜி இக்கோ': விண்ணப்பங்கள் வரவேற்பு

2 mins read
257a52d1-f086-4719-9e01-85788c3e6b4e
இந்த நிதி சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவு தருவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு கூறியது. கோப்புப்படம் -

சுற்­றுச்­சூ­ழ­லின் நீடித்த நிலைத்­தன்­மையை மேம்­ப­டுத்­தும் சமூ­கத் திட்டங்­க­ளைச் செயல்­ப­டுத்த எண்ணு­வோர் மீண்­டும் 'எஸ்ஜி இக்கோ' நிதி­யி­லி­ருந்து உதவி பெற­மு­டி­யும்.

இந்த நிதி­யில் உரு­வாக்­கப்­பட்டுள்ள புதிய பிரி­வின்­கீழ் விண்­ணப்­பங்­களைச் சமர்ப்­பிப்­பது, அவற்றைப் பரி­சீ­லனை செய்­வது இரண்டும் எளி­தா­க­வும் வேக­மா­க­வும் நடக்­கும்.

'எஸ்ஜி இக்கோ' நிதிக்கான விண்­ணப்­பங்­க­ள் நேற்று மீண்­டும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. வரும் அக்­டோ­பர் மாதம் 17ஆம் தேதி வரை விண்­ணப்­பங்­களைச் சமர்ப்­பிக்­க­லாம்.

50 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட இந்த நிதித்திட்டத்தை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. சிங்கப்பூரை நீடித்த நிலைத்தன்மைமிக்க நாடாக உருவாக்கும் தீர்வுகளை ஆதரிக்கும் நோக்குடன் நிதி தொடங்கப்பட்டது.

அதற்­குப் பின்­னர் நவம்­பர் மாதம் 25ஆம் தேதிக்­கும் இவ்­வாண்டு ஜன­வரி மாதம் 31ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நிதிக்கான விண்­ணப்­பங்­க­ள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதனைத் தொடர்ந்து 37 திட்டங்களுக்கு மொத்தமாக 3.7 மில்லியன் வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது.

இரண்­டா­வது முறை­யாக நிதிக்கான விண்­ணப்­பங்­கள் ஏற்றுக்கொள்ளப்படுவதை நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ மெய்­நி­க­ராக நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் அறி­வித்தார். 10,000 வெள்ளி வரை நிதி­யுதவி தேவைப்­படும் திட்­டங்­க­ளுக்­கான விண்­ணப்­பங்­களை எளி­தில் சமர்ப்­பிக்க 'ஸ்ப்ரெ­ளட்' எனும் பிரிவு உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் திரு­வாட்டி ஃபூ தெரி­வித்­தார்.

அதன்­படி பரிசீலனைக்குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட திட்­டங்­களை எழுத்து வடி­வில் விளக்­கு­வ­தற்­குப் பதி­லாக 'பிட்ச் டெக்' எனப்­படும் முறை­யைக் கொண்டு எளி­தில் பரி­சீ­ல­னைக் குழு­வி­டம் விவ­ரிக்­கலாம். இப்பிரிவின்கீழ் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் முறையும் எளிமைப்படுத்தப்படும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு வெளியிட்ட செய்தி அறிக்கை குறிப்பிட்டது.

மானி­யத்­திற்கு விண்­ணப்­பிக்கும் தனி­ந­பர்­கள் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்லது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­களாக இருக்­க­வேண்­டும். விண்ணப்­பிக்­கும் குழுக்­கள் ஒவ்­வொன்­றி­லும் குறைந்­தது ஒரு சிங்­கப்­பூ­ரர் அல்லது நிரந்தரவாசி இருக்­க­வேண்­டும். குழு­வில் உள்ள அனை­வ­ரும் சிங்­கப்­பூ­ரில் வசித்­துக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும்.

'எஸ்ஜி இக்கோ' நிதி, சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030க்கு ஆதரவு தருவதாக அமைச்சு கூறியது.