ஊழியர்களைப் பாலியல் உறவில் ஈடுபடச் சொன்னதற்கு சிறை, அபராதம்

ஊழியர்களைப் பாலியல் உறவில் ஈடுபடச் சொன்னதற்கு சிறை, அபராதம்

2 mins read
af4162b8-5504-4f61-92ee-2327166602b3
-

வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொள்­ளு­மாறு தங்­க­ளி­டம் வேலை செய்­யும் நட­ன­ம­ணி­க­ளி­டம் சொன்ன இரண்டு கேளிக்கைக் கூட உரி­மை­யா­ளர்­க­ளுக்­குச் சிறைத் தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன.

அவர்­களில் ஒரு­வ­ரான 60 வயது ராஜேந்­தி­ரன் நாக­ரத்­தி­னம் மீது ஆறு குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தப்­பட்­டி­ருந்­தன.

மற்­றொ­ரு­வ­ரான 46 வயது அரு­மைக்­கண்ணு சசி­கு­மார் மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.

சிங்­கப்­பூ­ர­ரான ராஜேந்­தி­ர­னுக்கு முத­லில் 30 மாதச் சிறைத் தண்டனை­யும் 3,000 வெள்ளி அபரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

அவர் மேல்­மு­றை­யீடு செய்­த­தைத் தொடர்ந்து உயர் நீதி­மன்­றம் சிறைத் தண்­ட­னையை 19 மாதங்­களா­கக் குறைத்­தது, அப­ரா­தத் தொகையை 2,500 வெள்­ளி­யா­கக் குறைத்­தது.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான சசி­கு­மா­ருக்கு 16 மாதச் சிறைத் தண்­ட­னை­யும் 11,000 வெள்ளி அபரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

அவ­ரின் மேல்­மு­றை­யீட்டு மனு நிரா­க­ரிக்­கப்­பட்­டது.

'கோலி­வுட்' என்ற தங்­க­ளின் கேளிக்கைக் கூடத்­திற்கு வரும் வாடிக்­கை­யா­ளர்­களை மகிழ்­விக்க இரு­வ­ரும் பல பெண்­களை நட­ன­மணி­க­ளாக வேலைக்கு எடுத்­த­னர். அவர்­களில் பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த இரண்டு பெண்­க­ளான குமாரி அக்­தர் பித்தி, குமாரி அக்­தர் டினா ஆகி­யோரை வாடிக்­கை­யா­ளர்­க­ளு­டன் பாலி­யல் உறவு வைத்­துக்­கொள்­ளு­மாறு ராஜேந்­தி­ர­னும் சசி­கு­மா­ரும் கூறி­இருக்கின்றனர்.

குமாரி பித்தி விருப்பமில்லாமல் இரண்டு வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டார். அதற்குக் கிடைத்த பணத்தை அவர் சசிகுமாரிடம் தந்தார்.

குமாரி டினா பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்தார். அதனைத் தொடர்ந்து ராஜேந்திரன் அவரை அடித்திருக்கிறார்.

பங்­ளா­தே­ஷைச் சேர்ந்த ரோக்கி என்ற மற்­றோர் ஊழி­ய­ரின் உத­வி­யு­டன் ராஜேந்­தி­ர­னும் சசி­கு­மா­ரும் அப்­பெண்­களை பாலி­யல் உற­வில் ஈடு­ப­டு­மாறு கூறி­இருக்கின்­ற­னர்.

குமாரி பித்­தி­யைப் பாலி­யல் தொழி­லில் ஈடு­பட வைத்­தது, அதில் வரும் வரு­மா­னத்­தைப் பயன்­ப­டுத்­தி­யது, கைதா­வ­தி­லி­ருந்து தப்­பிக்க ரோக்­கியை சிங்­கப்­பூ­ரை­விட்டு வெளி­யேற ஏற்­பாடு செய்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்டு­களை ராஜேந்­தி­ர­னும் சசி­கு­மா­ரும் எதிர்­நோக்­கி­னர்.