$1.24 மில்லியன் கையூட்டு வாங்கிய குற்றம்

$1.24 மில்லியன் கையூட்டு வாங்கிய குற்றம்

1 mins read
7d4c00df-bfb5-4165-8505-481db3ea8949
-
Google News Preferred Icon

கடனாக மொத்தம் சுமார் 1.24 மில்லியன் வெள்ளி கையூட்டு பெற்றதை நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் துணைக் குழும இயக்குநர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆணையத்துடன் இணைந்து வேலை செய்த சில வெளி நிறுவனங்களிடமிருந்து திரு ஹென்ரி ஃபூ யங் தை கையூட்டாகப் பணத்தைப் பெற்றார்.

ஊழல் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்டிருந்த ஏழு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

ஏமாற்றியது உள்ளிட்ட மேலும் 29 குற்றச்சாட்டுகள் தீர்ப்பு அளிக்கும்போது கருத்தில் கொள்ளப்படும்.

அடுத்த மாதம் இரண்டாம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும்.