மறுபடியும் மதுபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு

பங்­குச் சந்­தை­யில் இடம்­பெற்றுள்ள 'ஜியோ எனர்ஜி' எனும் நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் ஒரு­வர் மீது இரண்­டா­வது முறை­யாக மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தா­கக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது. 50 வயது சார்ல்ஸ் ஆண்­டனி மெலாட்டி மீது ஏற்­கெ­னவே 2006ஆம் ஆண்­டில் மது அருந்­தி­விட்டு வாக­னம் ஓட்­டி­ய­தா­கச் சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டது. அதன் தொடர்­பி­லான விவ­ரங்­கள் நீதி­மன்ற ஆவ­ணங்­களில் இல்லை.

முதன்முறையாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10,000 வெள்ளி வரை­யி­லான அப­ரா­தம், ஓராண்டு வரை­யி­லான சிறைத் தண்­டனை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­படலாம். குற்றத்தை இரண்டாவது முறை புரிந்தது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ஈராண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

'ஃபோர்ச்­சி­யூன் கோல் ரிசோர்­சஸ்', 'குலோரி புரோஸ் டிரே­டிங்', 'எஸ்­டிடி கோல் ரிசோர்­சஸ்' ஆகிய இதர மூன்று நிறு­வ­னங்­க­ளி­லும் திரு மெலாட்டி இயக்­கு­ந­ரா­கப் பத­வி­வ­கிப்­ப­தாக கணக்­கி­யல், நிறு­வ­னக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின் தர­வுத்­த­ளத்­தில் உள்ள தக­வல்­கள் தெரி­வித்­தன.

சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான இவர், கடந்த மே மாதம் 15ஆம் தேதி­யன்று மது அருந்திவிட்டு வாக­னம் ஓட்­டி­ய­தா­கச் சொல்­லப்­படு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!