10 பேர் மீது மானபங்கக் குற்றச்சாட்டுகள்

10 பேர் மீது மானபங்கக் குற்றச்சாட்டுகள்

1 mins read
b7d71e08-52ae-410b-bfc9-718b2de58d32
-

சிங்கப்பூரரான 70 வயது சூவா கீ லோய் இம்­மா­தம் ஐந்­தாம் தேதி­யன்று பெண் நோயாளி ஒரு­வரை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படு­கிறது.

அவர் மீது ஒரு மானபங்கக் குற்றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது.

தடை உத்­த­ரவு உள்­ள­தால் பெண்­ணின் பெயர் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இத­னு­டன் தொடர்­பில்­லாத வேறு சம்­ப­வங்­களில் குடும்­பத்­தாரை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தாக இரு ஆட­வர்­கள் மீது குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

மூன்­றா­வ­தாக ஒரு­வர் சக ஊழியரை பல முறை மான­பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­படு­கிறது.

தடை உத்­த­ரவு உள்­ள­தால் அவர்­க­ளின் பெயர்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை. மூவ­ரும் 45 வய­துக்­கும் 63 வயதுக்­கும் உட்­பட்­ட­வர்­கள்.

மேலும், சிங்கப்­பூ­ரர்­க­ளான முக­மது சிய­மீர் முக­மது ஷமுதி, அங் செங் வெய், மலே­சி­யர்­க­ளான லாய் சி சுவான், ஷந்த்ரு முத்­து­சாமி, இந்­தி­யாவின் ராஜேந்­தி­ரன் சுரேஷ் மேனன் ஆகி­யோர் மீதும் மான­பங்­கக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர்கள் 19 வயதுக்கும் 33 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பத்தாவது நபர், 35 வயது குர்ஜித் சிங்.

அனைத்து மான­பங்­கச் சம்­ப­வங்­களும் 2016ஆம் ஆண்­டுக்­கும் இவ்­வாண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் நிகழ்ந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

மான­பங்­கக் குற்­றச்­சாட்டு நிரூபிக்­கப்­பட்­டால், குற்­ற­வா­ளிக்கு அதி­க­பட்­ச­மாக ஈராண்­டுச் சிறைத் தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி ஆகி­ய­வற்­றில் எது­வும் விதிக்­கப்­ப­ட­லாம்.

14 வய­துக்கு உட்­பட்­ட­வரை மான­பங்­கப்­ப­டுத்­தி­யது நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு அதி­க­பட்­ச­மாக ஐந்­தாண்டு சிறைத் தண்டனை, அப­ரா­தம், பிரம்­படி ஆகி­ய­வற்­றில் எது­வும் விதிக்­கப்­ப­ட­லாம்.

50 வய­தைத் தாண்­டிய குற்­ற­வா­ளி­க­ளுக்­குப் பிரம்­படி கொடுக்க முடியாது.