எல்லைப்பகுதி முறைகேடுகளை மோப்பம் பிடிக்கும் புதிய நாய் படை

எல்லைப்பகுதி முறைகேடுகளை மோப்பம் பிடிக்கும் புதிய நாய் படை

1 mins read
08654ef9-412c-43d7-ae4a-f4233942c504
-

நாட்டின் எல்லைப்பகுதியில் மோப்பநாய்கள், அருகிவரும் விலங்கினங்கள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுவதைக் கண்டுபிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. யானை தந்தங்கள், பங்கோலின் செதில்கள் உள்ளிட்டவற்றைக் கண்டுபிடிக்கும் தொழிலை இந்நாய்கள் கொண்டுள்ளன.

தேசிய பூங்காக்கழகத்தைச் சேர்ந்த இந்த கே9 படை, பயணப்பெட்டிகளிலோ சரக்குப் பெட்டிகளிலோ பதுக்கப்பட்ட சட்டவிரோத விலங்கு மற்றும் வெடிப் பொருட்களைக் கண்டுபிடிக்கப் பயிற்சி பெற்றுள்ளது. யானை தந்த வர்த்தகத்தின் தடையை சிங்கப்பூர் அடுத்த வாரம் செயல்படுத்தவுள்ள நிலையில் இது ஏற்பட்டுள்ளது.

இந்த நாயின் மேம்பட்ட நுகர்வுப்புலனால் ஸ்கேனர்கள் போன்ற கருவிகளால் கண்டுபிடிக்க இயலாத பொருட்கள் தென்படலாம்.