போதைப்பொருள் குற்றங்கள்: 161 சந்தேக நபர்கள் கைது

போதைப்பொருள் குற்றங்கள்: 161 சந்தேக நபர்கள் கைது

1 mins read
8a21e380-1d7a-40a6-bcb8-ced06e8b7cbf
-

சிங்கப்பூரில் மொத்தம் 161 போதைப்பொருள் சந்தேக நபர்கள் தீவெங்கிலும் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் பிடிப்பட்டனர். போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, இந்தச் சோதனையை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடத்தியது.

சிஎன்பி அதிகாரிகள் மொத்தம் மூன்று கிலோகிராம் போதைமிகு அபின், 37 கிராம் கெட்டமின், 31 எக்ஸ்டசி மாத்திரைகள், 116 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 253,000 வெள்ளிக்கும் அதிகமானது.