சிங்கப்பூரில் சமூகத்தில் புதிதாக 120 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 47 பேர், புகிஸ் ஜங்ஷன் கிருமித்தொற்றுடன் தொடர்புடையவர்கள்.
எஞ்சிய 73 பேரில் 31 பேர், முன்னைய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள். மற்ற 16 பேர், முன்னையச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லர் என்று சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டோரில் 70 வயதுக்கும் அதிகமான மூவரும் அடங்குவர். இவர்களுக்கு தடுப்பூசி முழுமையாகப் போடப்படவில்லை அல்லது பகுதி தடுப்பூசி மட்டுமே போடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் கிருமித்தொற்றுக்கு உள்ளாகி சிங்கப்பூர் வந்துள்ள இரண்டு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது வீட்டில் தங்கும் உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆக மொத்தத்தில் சிங்கப்பூரில் இன்று 122 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதாகப் பதிவாகியுள்ளது. இதனுடன் நாட்டின் மொத்த எண்ணிக்கை 67, 050ஆக உயர்ந்துள்ளது.

