பிரதமர் லீ சியன் லூங் நாளை மறுநாள் நிகழ்த்தவிருக்கும் தேசிய தினப் பேரணி உரை, வழக்கமான தொலைக்காட்சி மற்றும் இணையம் தவிர மீடியாகார்ப் ஸ்டுடியோவிலும் ஸூம் வாயிலாகவும் பங்கேற்கும் 2,000க்கும் மேற்பட்டோர் முன்னிலையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக திரு லீ தமது சமூக ஊடகப் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றி உள்ளார்.
கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக இவ்வாண்டு வித்தியாசமாக பேரணி உரை நிகழ்வு அமையும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் உரையாக இப்பேரணி பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆகஸ்ட் 22ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி உரை, சமூக அளவில் கொள்ளைநோய் திடீரென அதிகரித்ததன் காரணமாக கட்டுப் பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டது.

