கொவிட்-19 தொடர்பான பாது காப்பு விதிமுறைகளை மீறியதற் காக இந்த வாரத்தில் பத்து உணவு. பானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மூன்று கடைகள், சாப்பிட வந்தோர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளனரா என சோதனை செய்யத் தவறின. அவை பிரின்செப் ஸ்திரீட், ஜாலான் புசார் மற்றும் கிளைவ் ஸ்திரீட் பகுதிகளில் அமைந்து உள்ள உணவு. பானக் கடைகள். இதர ஏழு கடைகளும் வெவ் வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக நீடித்த நிலைத் தன்மை, சுற்றுப்புற அமைச்சு நேற்று தெரிவித்தது.
இவை தவிர ஆர்ச்சர்ட் சாலையின் இண்டர்நேஷனல் கட்டடத்தில் அமைந்துள்ள ஓர் உணவு நிறுவனத்திற்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் அமர்ந்து சாப்பிடுவோருக்கு இடையிலான பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக அமைச்சு கூறியது.

