சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி சமூகத்தில் புதிதாக 120 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாயினர். அவர்களில் 47 பேர் பூகிஸ் ஜங்ஷன் தொற்றுக் குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
எஞ்சிய 73 பேரில் 31 பேர் முந்தைய நோயாளிகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் முன்பே தனிமைப்படுத்தப்பட்ட வர்கள்.
இதர 16 பேருக்கு தொற்று தெரியவந்தபோது அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. எஞ்சிய 26 பேருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை என சுகாதார அமைச்சு கூறியது.
வெளிநாடுகளில் இருந்து வந்த இரண்டு பேருக்கு தொற்று இருந்தது. அவர்களுக்கு தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதிதாக கிருமி தொற்றியோரையும் சேர்த்து சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றியவர்களின் மொத்த எண்ணிக்கை 67,050 ஆகி இருக்கிறது.

