செப்.1 முதல் திறப்பு

செப்.1 முதல் திறப்பு

2 mins read
551e44cd-7248-4b28-920c-46f311b72156
-

சாங்கி விமானநிலைய முனையம் 1, முனையம் 3க்குச் செல்லலாம்

கொள்­ளை­நோய் கார­ண­மாக மூன்று மாத காலம் மூடி வைக்­கப்­பட்­டி­ருந்த சாங்கி விமான நிலை­யம் முனை­யம் 1 மற்­றும் முனை­யம் 3 ஆகி­யன செப்­டம்­பர் 1ஆம் தேதி (புதன்­கி­ழமை) முதல் பொது­மக்­க­ளுக்கு மீண்­டும் திறக்­கப்­பட உள்­ளன.

வந்­தி­றங்­கும் பய­ணி­க­ளி­டம் இருந்து உள்­ளூர் பொது­மக்­க­ளைத் தனி­யாக பிரித்து வைக்­கும் கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் உள்­ள­தைத் தொடர்ந்து இம்முயற்சி எடுக்­கப்­ப­டு­கிறது.

எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் படிப்­ப­டி­யாக தளர்த்­தப்­பட்ட பின்­னர் சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை உய­ரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இப்­போ­தைக்கு விமான நிலைய வரு­கைக்­கூ­டங்­களில் வரு­கைப் பய­ணி­க­ளுக்­கும் நிபு­ணத்­துவ சந்­திப்­புச் சேவை­களை நடத்­து­வ­தற்­கும் அனு­மதி உண்டு. மேலும், இந்த இரு முனை­யங்­களில் உள்ள குளிர்­சா­தன வசதி ­களும் வெளிச்­ச­மூட்­டும் வச­தி­ களும் மேம்­ப­டுத்­தப்­பட்டுள்­ளன. மூன்­றா­வ­தாக, பொது­மக்­க­ளு­டன் கலப்­ப­தைத் தவிர்க்­கும் பொருட்டு விமா­ன­நி­லைய ஊழி­யர்­க­ளுக்­கென தனி­யாக சாப்­பி­டும் இட­மும் ஓய்­வெ­டுக்­கும் பகு­தி­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளன.

இரு முனை­யங்­க­ளின் திறப்பு குறித்து சிங்­கப்­பூர் சிவில் விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­ய­மும் சாங்கி விமா­னக் குழு­ம­மும் நேற்று கூட்­டாக அறி­வித்­தன.

இது தொடர்­பாக கருத்­துத் தெரி­வித்த ஆணை­யத்­தின் தலைமை இயக்­கு­நர் ஹான் கோக் ஜுவான், "முனை­யங்­கள் 1 மற்­றும் 3 மறு­தி­றப்­புக்­காக சாங்கி விமான நிலை­யக் குழு­மம் செய்­தி­ருக்­கும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் எங்­க­ளுக்­குத் திருப்தி உண்டு," என்­றார்.

மேலும் அவர் கூறு­கை­யில், "நமது எல்­லை­க­ளைத் திறக்க சிங்­கப்­பூர் கவ­னத்­து­டன் செயல்­பட்டு வரும் வேளை­யில், சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளுக்­கும் இங்­கி­ருந்து பயண மாறு­தல் மேற்­கொள்­வோர்க்­கும் பாது­காப்­பான இட­மாக சாங்கி விமான நிலை­யம் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டிய தேவை எங்­க­ளுக்கு உண்டு.

"விமான நிலை­யத்­தில் கடைப்­பி­டிக்­கப்­படும் பாது­காப்பு நடை­முறை விதி­களை கொவிட்-19 சூழ­லுக்கு ஏற்ப மறு­ஆய்வு செய்­வதை ஆணை­யம் தொட­ரும்," என்­றார்.

அதே­நே­ரம், சாங்கி விமான நிலையம் முனை­யம் 2ம் முனை­யம் 4ம் தொடர்ந்து மூடப்­பட்­டி­ருக்­கும். கொவிட்-19 பரவல் கார­ண­மாக பய­ணி­கள் எண்­ணிக்கை சரிந்­த­தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் முதல் இவ்­விரு முனை­யங்­களும் மூடப்­பட்­டுள்­ளன.