10 உணவு, பான கடைகளை மூட உத்தரவு

10 உணவு, பான கடைகளை மூட உத்தரவு

1 mins read
94ef5b90-cb81-4af1-897d-521c3925c88b
-

கொவிட்-19 தொடர்­பான பாது காப்பு விதி­மு­றை­களை மீறி­ய­தற் காக இந்த வாரத்­தில் பத்து உணவு. பானக் கடை­களை மூட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இவற்­றில் மூன்று கடை­கள், சாப்­பிட வந்­தோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுள்­ள­னரா என சோதனை செய்­யத் தவ­றின. அவை பிரின்­செப் ஸ்தி­ரீட், ஜாலான் புசார் மற்­றும் கிளைவ் ஸ்தி­ரீட் பகு­தி­களில் அமைந்து உள்ள உணவு. பானக் கடை­கள். இதர ஏழு கடை­களும் வெவ் வேறு விதி­முறை மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக நீடித்த நிலைத் தன்மை, சுற்­றுப்­புற அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இவை தவிர ஆர்ச்­சர்ட் சாலை­யின் இண்­டர்­நே­ஷ­னல் கட்­ட­டத்­தில் அமைந்­துள்ள ஓர் உணவு நிறு­வ­னத்­திற்கு $2,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. உண­வ­கத்­தில் அமர்ந்து சாப்­பி­டு­வோ­ருக்கு இடை­யி­லான பாது­காப்பு இடை­வெளி விதி­மு­றை­

க­ளைக் கடைப்­பி­டிக்­கத் தவ­றி­ய­தற்­காக இந்த அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தாக அமைச்சு கூறி­யது.