மாறுபட்ட முறையில் 2,000 பேர் முன் பிரதமரின் பேரணி உரை

மாறுபட்ட முறையில் 2,000 பேர் முன் பிரதமரின் பேரணி உரை

1 mins read
3c649083-8551-415e-821e-8423a0d996c2
-

பிர­த­மர் லீ சியன் லூங் நாளை நிகழ்த்­த­வி­ருக்­கும் தேசிய தினப் பேரணி உரை, வழக்­க­மான தொலைக்­காட்சி மற்­றும் இணை­யம் தவிர மீடி­யா­கார்ப் ஸ்டு­டி­யோ­வி­லும் ஸூம் வாயி­லா­க­வும் பங்­கேற்­கும் 2,000க்கும் மேற்­பட்­டோர் முன்­னி­லை­யில் நடை­பெற உள்­ளது.

இது தொடர்­பாக திரு லீ தமது சமூக ஊட­கப் பக்­கத்­தில் காணொளி ஒன்­றைப் பதி­வேற்றி உள்­ளார்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் கார­ண­மாக இவ்­வாண்டு வித்­தி­யா­ச­மாக பேரணி உரை நிகழ்வு அமை­யும் என்று அதில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இவ்­வாண்­டின் அதிக முக்­கி­யத்­து­வம் வாய்ந்த அர­சி­யல் உரை­யாக இப்­பே­ரணி பார்க்­கப்­ப­டு­கிறது.

முன்­ன­தாக, ஆகஸ்ட் 22ஆம் தேதி நடத்த ஏற்­பாடு செய்­யப்­பட்ட பேரணி உரை, சமூக அள­வில் கொள்­ளை­நோய் திடீ­ரென அதி­

க­ரித்ததன் கார­ண­மாக கட்­டுப்­

பா­டு­கள் மேலும் கடு­மை­யாக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஒரு வாரத்­திற்­குத் தள்ளி­ வைக்­கப்­பட்­டது.