கட்டுமான நிறுவனத்திடம் $600 லஞ்சம்: குற்றச்சாட்டு

கட்டுமான நிறுவனத்திடம் $600 லஞ்சம்: குற்றச்சாட்டு

1 mins read
6ff099ce-57bd-44e9-8dca-1f88042f4163
-

ஆய்­வின்­போது கண்­டும் காணா­மல் இருக்க ஒரு கட்­டு­மான நிறு­வ­னத்­தி­டம் இருந்து $600 லஞ்­சம் பெற்­ற­தா­கக் கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தின் முன்­னாள் ஆய்­வுப் பொறி­யா­ளர்­மீது குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

டான் மிங் லை, 32, என்ற அந்­தச் சிங்­கப்­பூ­ரர்­மீது நேற்று இரு லஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தில் தற்­கா­லிக ஊழி­ய­ரா­கப் பணி­பு­ரிந்த டான், கடந்த நவம்­பர் மாதம் 'டொமைன் டிரே­டிங் அண்ட் கன்ஸ்ட்­ரக்ஷன்' என்ற நிறு­வ­னத்­தின் பொது மேலா­ளர் கோ டாக் டான் என்­ப­வ­ரி­டம் இருந்து லஞ்­சம் பெற்­ற­தாக நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

அவ்­வே­ளை­யில், இயோ சூ காங் வட்­டா­ரத்­தில் 69, பெகோ­னியா டிரைவ் எனும் முக­வ­ரி­யில் அமைந்­தி­ருந்த கட்­டு­மா­னத்­

த­ளத்தை டொமைன் நிறு­வ­னம் நிர்­வ­கித்து வந்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

அதே கால­கட்­டத்­தில், ஆய்­வின்­போது கண்­டும் காணா­மல் இருப்­ப­தற்­காக சின் ஹாக் கியோங் என்ற கட்­டு­மான நிறு­வ­னத்­தின் திட்ட மேலா­ள­ரி­டம் இருந்து லஞ்­சம் பெற டான் முயன்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், அந்­தத் திட்ட மேலா­ளர் அதற்கு உடன்­பட மறுத்­த­தோடு, கட்­டட, கட்­டு­மான ஆணை­யத்­தி­டம் புகார் அளித்­தார். ஊழல் குற்­றச்­சாட்டுக்கு $100,000 வரை அப­ரா­தம் அல்­லது ஐந்­தாண்­டு­வரை சிறை அல்­லது இவ்­விரு தண்­ட­னை­களும் விதிக்­கப்­ப­ட­லாம்.