போதைப்பொருள்: 17 வயது பெண் உள்ளிட்ட 161 பேர் கைது

போதைப்பொருள்: 17 வயது பெண் உள்ளிட்ட 161 பேர் கைது

1 mins read
a3538cc9-a143-4af8-88c9-8c5e0f1aaf9b
தெம்பனிஸ் அவென்யூ 2ல் உள்ள ஒரு வீட்டின் கழிவறைத் தொட்டிக்குள் ஒளித்து வைக்கப் பட்டிருந்த போதைப் பொருள். படம்: மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு -

தீவு முழு­வ­தும் ஆகஸ்ட் 16 முதல் நேற்று வரை நடத்­தப்­பட்ட சோத­னை­யில் போதைப் புழங்­கி­கள் என சந்­தே­கிக்­கப்­படும் 161 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இவர்­க­ளி­டமிருந்து மூன்று கிலோ­வுக்­கும் மேற்­பட்ட ஹெரா­யின் போதைப்­பொருளை அதி­கா­ரி­கள் கைப்­பற்­றி­னர். மேலும் 544 கிராம் ஐஸ் போதைப்­பொ­ருள், 53 கிராம் கஞ்சா, 37 கிராம் கெட்­ட­மைன், 312 எக்­டஸி மாத்­தி­ரை­கள் உள்­ளிட்­ட­வை­யும் இரு வார சோத­னை­யில் சிக்­கின. கைப்­பற்­றப்­பட்ட போதைப்­பொ­ருள்­க­ளின் மதிப்பு $253,000க்கும் மேல் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் ஆக இளை­ய­வர் 17 வயது சிங்­கப்­பூர் பெண் என்­றும் அவர் போதைப் புழங்கி என சந்­தே­கிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று தெரி­வித்­தது.