சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஆக்லாந்து ரயில் ஒப்பந்தம்

சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ஆக்லாந்து ரயில் ஒப்பந்தம்

2 mins read
ce7d7421-55b7-4a06-8efe-09bd9c7b73b6
-

நியூ­சி­லாந்­தின் ஆக்­லாந்து நக­ரில் ரயில் சேவை­களை நடத்­து­வ­தற்­கான $1.13 பில்­லி­யன் ஒப்­பந்­தத்தை சிங்­கப்­பூ­ரின் கம்­ஃபர்ட்­டெல்­குரோ குழு­மம் பெற்­றுள்­ளது. நியூ­சி­லாந்­தின் நிலப் போக்­கு­வ­ரத்­துச் சந்­தை­யில் குழு­மம் பெற்­றி­ருக்­கும் முதல் ஒப்­பந்­தம் என்­ப­தோடு வெளி­நாட்டு ரயில் சேவை­யில் கால்­ப­திக்­கும் வாய்ப்­பை­யும் கம்­ஃபர்ட்­டெல்­குரோ பெற்­றுள்­ளது. இதனை இக்­கு­ழு­மம் நேற்று அறி­வித்­தது.

பேருந்து மற்­றும் டாக்சி சேவை­களை சீனா­வி­லும் பிரிட்­ட­னி­லும் கம்­ஃபர்ட்­டெல்­குரோ ஏற்­கெ­னவே நடத்தி வரு­கிறது. சிங்­கப்­பூ­ரில் பேருந்து, ரயில் மற்­றும் டாக்சி சேவை­களை நடத்­தும் இக்­கு­ழு­மம் ஆஸ்­தி­ரே­லிய ரயில் நிறு­வ­ன­மான 'யுஜி­எல் ரயில் சர்­வி­சஸ்' என்­னும் நிறு­வ­னத்­து­டன் இணைந்து நியூ­சி­லாந்து வாய்ப்­பைப் பெற்­றுள்­ளது. 12 மாத கால ஏலக்­குத்­தகை நடை­முறை முடி­வுற்ற பிறகு இது சாத்­தி­ய­மா­னது. கம்­ஃபர்ட்­டெல்­குரோ -யுஜி­எல் ரயில் சர்­வி­சஸ் இரண்­டும் இணைந்து 'ஆக்­லாந்து ஒன் ரயில்' என்­னும் கூட்டு நிறு­வ­னத்தை 50:50 பங்கு விகி­தத்­தில் ஏற்­ப­டுத்தியுள்­ளன.

ஆக்­லாந்து மெட்ரோ ரயில் சேவையை இப்­பு­திய நிறு­வ­னம் 2022 ஜன­வரி 16 முதல் தொடங்­கும். இதற்­கான குத்­த­கைக் காலம் எட்டு ஆண்­டு­கள். இதனை நீட்­டிக்­கும் சாத்­தி­யம் உண்டு என கம்­ஃபர்ட்­டெல்­குரோ கூறி­யது.

ஆக்­லாந்து ரயில் கட்­ட­மைப்பு நியூ­சி­லாந்­தில் ஆகப் பெரி­யது. 185 கிலோ மீட்­டர் நீளத்­திற்கு நான்கு ரயில் தடங்­களை நிர்­வ­கிக்­கிறது. 42 ரயில் நிலை­யங்­களும் 72 மின்­சார ரயில்­களும் இக்­கட்­ட­மைப்­பில் அடங்­கும். 2024ஆம் ஆண்டு 'சிட்டி ரயில் லிங்க்' என்­னும் புதிய ரயில் தடம் ஆக்­லாந்­தில் தொடங்­கப்­பட்ட பின்­னர், ரயில் நிலை­யங்­க­ளின் எண்­ணிக்கை 44 ஆக­வும் ரயில்

­க­ளின் எண்­ணிக்கை 95 ஆக­வும் உய­ரும்.

கொவிட்-19 கொள்­ளை­நோய் பர­வு­முன் ஆண்­டுக்கு 21 மில்­லி­யன் பய­ணி­க­ளுக்கு இக்­கட்­ட­மைப்பு சேவை­யாற்­றி­யது.