$45,000 லஞ்சம்: முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

$45,000 லஞ்சம்: முன்னாள் அதிகாரி மீது குற்றச்சாட்டு

2 mins read
87fba127-01ed-471f-84ef-de7c3dc62310
-

பொய்­யான கட்­ட­ணப் பட்­டி­

ய­லைத் தயார் செய்­த­தற்­கா­க­வும் $45,000 லஞ்­சம் பெற சம்­ம­தித்­தற்­கா­க­வும் பொதுப் பய­னீட்­டுக் கழக (பியூபி) முன்­னாள் உத­விப் பொறி­யா­ளர் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

ஜமா­லு­தீன் முகம்­மது எனப்­படும் 58 வயது சிங்­கப்­பூ­ர­ரான அவர் மூன்று லஞ்ச ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் பொய்க் கணக்­கைத் தயார் செய்த இரு குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் எதிர்­நோக்­கு­கி­றார்.

'பைப் ஒர்க்ஸ்' என்­னும் நிறு­வ­னத்­தில் திட்ட மேலா­ள­ராக இருந்த சிங்­கப்­பூ­ர­ரான கணே­சன் சுப்­பையா, 51, என்­ப­வ­ரி­டம் இருந்து இவர் லஞ்­சம் பெற்­ற­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

கணே­சன் மீதும் நேற்று ஒரு லஞ்ச ஊழல் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது. மேலும் பொய்க் கணக்கு தயார் செய்ய உடந்­தை­யாக இருந்த இரு குற்­றச்­சாட்­டு­களும் கணே­சன் மீது சுமத்­தப்­பட்­டன. 'பைப் ஒர்க்ஸ்' நிறு­வ­னத்­திற்கு கழ­கத்­தின் பணியை வழங்கி அதனை வேக­மாக முடிக்க ஜமா­லு­தீன் லஞ்­சம் பெற்­ற­தா­க­வும் 2017க்கும் 2018க்கும் இடைப்­பட்ட காலத்­தில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் லஞ்­சப் பணம் கைமா­றி­ய­தா­க­வும் நீதி­மன்ற ஆவ­ணங்­கள் தெரி­வித்­தன.

ஏலக்­குத்­தகை பெற தண்­ணீர் குழாய் பணி­க­ளைச் செய்­யும் வேறொரு நிறு­வ­னத்­தி­டம் 2019 ஜூலை மாதம் ஜமா­லு­தீன் $500,000 லஞ்­சம் வாங்க முயன்­ற­தா­க­வும் அதே மாதம் மற்­றொரு கட்­டு­மான நிறு­வ­னத்­தி­டமிருந்து அதே ஏலக்குத்­த­கையை ஆத­ரிக்க லஞ்­சம் கேட்­ட­தா­க­வும் ஆவ­ணங்­கள் குறிப்­பிட்­டன.

இருப்­பி­னும் அவ்­விரு நிறு­வ­னங்­களும் லஞ்­சம் தர மறுத்­து­விட்­ட­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது. தம் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொள்ள இணங்கு­ வ­தாக ஜமா­லு­தீன் நேற்று நீதி­மன்­றத்­தி­டம் தெரி­வித்­தார்.