செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e387005b-873c-4cf2-915c-3c0d402324f2
-

சிங்­கப்­பூர்-மலே­சிய உற­வு­கள் குறித்து முகை­தீ­னு­டன் பிர­த­மர் லீ உரை­யா­டல்

பிர­த­மர் லீ சியன் லூங் மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசி­னு­டன் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு பேசி­யி­ருப்­ப­தாக திரு லீயின் பத்­தி­ரி­கைச் செய­லா­ளர் சாங் லி லின் தெரி­வித்­துள்­ளார். இச்­சந்­திப்பு குறித்து திரு முகை­தீன் தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்டது தொடர்­பாக ஊட­கங்­கள் கேள்வி எழுப்­பி­ய­போது இரு­வ­ரும் பேசி­யதை திரு­வாட்டி சாங் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

"தொலை­பேசி உரை­யா­ட­லின்­போது திரு லீயும் திரு முகை­தீ­னும் இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான அணுக்க உற­வு­கள் பற்றியும் உறு­தி­மிக்க ஒத்­து­ழைப்பு பற்­றி­யும் விவா­தித்­த­னர். அத்­து­டன் திரு முகை­தீ­னின் வருங்­கா­லம் வள­மாக இருக்க திரு லீ வாழ்த்­தி­னார்," என்று திரு­வாட்டி சாங் கூறி­னார்.

முன்­ன­தாக, நல்­ல­தொரு உற­வை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் இரு நாடு­களும் கொண்­டி­ருப்­பது குறித்து திரு லீ பாராட்டு தெரி­வித்­த­தாக திரு முகை­தீன் தமது இன்ஸ்­ட­கி­ராம் பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார். மேலும், இரு­த­ரப்பு உற­வு­க­ளைத் தொட­ரு­வ­தில் தாம் தொடர்ந்து பங்­காற்­று­வது குறித்து திரு லீ நம்­பிக்கை தெரி­வித்­த­தா­க­வும் முன்­னாள் மலே­சிய பிர­த­மர் கூறி­னார்.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை திரு லீ, மலே­சி­யா­வின் புதிய பிர­த­மர் திரு இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்பை தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு வாழ்த்­துத் தெரி­வித்­தார்.

தெமாசெக் நிறுவனத்துக்கு இந்தோனீசியாவின் உன்னத விருது

சிங்­கப்­பூ­ருக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் இடை­யி­லான இரு­த­ரப்பு உற­வு­களை வலுப்­ப­டுத்த முயற்­சி­கள் மேற்­கொண்­ட­தற்­காக சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனமான தெமா­செக்கிற்கு இந்­தோ­னீ­சியா விருது வழங்­கி­யுள்­ளது. இந்த 'உன்­னத விருது' வழங்­கும் நிகழ்வு நேற்று முன்­தி­னம் சிங்­கப்­பூ­ரிலுள்ள இந்­தோ­னீ­சி­யத் தூத­ர­கத்­தில் நடை­பெற்­றது. நிகழ்ச்சி இணை­யத்­தில் நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பப்­பட்­டது. விருதை தெமா­செக் இண்­டர்­நே­ஷ­னலின் நிர்­வாக இயக்­கு­நர் தில்­ஹன் பிள்­ளை­யி­டம் சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தோ­னீ­சியத் தூதர் சூர்யோ பிர­தோமோ வழங்­கிச் சிறப்­பித்­தார். இந்­தோ­னீ­சி­யா­வுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யி­லான புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்­தும் நிறு­வ­னத்­துக்­கும் தனிப்­பட்­ட­வர்­க­ளுக்­கும் இந்­தோ­னீ­சியா ஆண்­டு­தோ­றும் விருது வழங்கி வரு­கிறது. நிகழ்­வில் பேசிய இந்­தோ­னீ­சியத் தூதர் சூர்யோ பிர­தோமோ, தெமா­செக்­கும் அதன் குழு நிறு­வ­னங்­களும் இந்­தோ­னீ­சி­யா­வில் பல்­லாண்டு கால­மாக தொடர்ந்து முத­லீடு செய்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். மேலும், கொவிட்-19 கொள்­ளை­நோய் காலத்­தில் வேலைப் பயிற்சி, கல்வி உப­கா­ரச் சம்­ப­ளம் மற்­றும் நன்­கொடை வழங்­கு­வது போன்­ற­வற்­றில் இந்­தோ­னீ­சி­யா­வுக்­கு தெமா­செக் ஆத­ர­வுக்­க­ரம் நீட்­டி­ய­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

பெற்றோர்களுக்கான பயிலரங்கு

சிண்டாவின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) நாளை ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை பெற்றோர்களுக்கான இலவசப் பயிலரங்கை இணையம் வழி நடத்துகிறது. பெற்றோர்கள் மற்றும் இளையர்களுக்கான

பயிலரங்குகள் நடத்துவதில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுப வம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களாகிய திருமதி ஜகஜித் கோர் மற்றும் திரு மணிவண்ணன் இருவரும் பயிலரங்கை நடத்த விருக்கின்றனர். கேள்வி-பதில் அங்கமும் உண்டு. சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா.அன்பரசு சிறப்பு விருந்தி னராகக் கலந்துகொள்ளும் இப்பயிலரங்கில் பங்கேற்பதற்கான ஸூம் அடையாள எண்: 899 4790 5422 நுழைவுக் குறியீடு: JMCSG.