செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
aae382fe-1427-4e2d-b07c-769302dc6cdc
-

பிரதமர் இன்று பேரணி உரை

பிரதமர் லீ சியன் லூங் இன்று மாலை 6.45 மணிக்கு தேசிய தினப் பேரணி உரையாற்றுகிறார். மீடியாகார்ப் அரங்கிலும் ஸூம் வாயிலாகவும் பிரதமர் ஆற்றும் உரை உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் வானொலி நிலையங்களி லும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பாகும். பிரதமர் அலுவலக யூடியூப்பிலும் பிரதமரின் ஃபேஸ்புக் பக்கத்திலும் அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான ரீச் பக்கத்திலும் பேரணி உரை நேரடியாக ஒளிபரப்பாகும். ஸ்ட்ரெய்ட்ஸ்

டைம்ஸ் இணையத்தளத்திலும் நேரடி ஒளிபரப்பை காணலாம்.

113 பேருக்குச் சமூகத்தொற்று

சிங்கப்பூரில் நேற்று நண்பகல் வாக்கில் புதிதாக 113 பேருக்கு கொவிட்-19 சமூகத்தொற்று உறுதியானது. அவர்களில் 25 பேர் பூகிஸ் ஜங்ஷன் தொற்றுக் குழுமத்த துடன் தொடர்புடையவர்கள். இதர 88 பேரில் 32 பேருக்கு முந்தைய கொரோனா நோயாளிகளுடன் தொடர்புண்டு. அவர்கள் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்ட வர்கள். இதர 27 பேருக்குத் தொற்று தெரியவந்தபோது அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. எஞ்சிய 29 பேருக்குத் தொற்று எப்படி ஏற்பட்டது என்பது தெரிய வில்லை. வெளிநாடுகளில் இருந்து வந்த எட்டு பேருக்கும் தொற்று இருந்தது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. இதற்கிடையே முதியோர் மூவர் கொரொனோ காரணமாக மரணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்ந்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆகியுள்ளது.

நாளை முதல் சினோஃபாம் ஊசி

சிங்கப்பூரில் சில மருத்துவமனைகளிலும் மருந்தகங்களி லும் கொவிட்-19க்கு எதிரான சினோஃபாம் தடுப்பூசியை நாளை முதல் போட்டுக்கொள்ளலாம்.

இரு தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள ஜிஎஸ்டி உள்ளிட்ட கட்டணம் $98. கிளியர்பிரிட்ஜ் ஹெல்த் மெடிக் சரிஜிக்கல் என்ற சுகாதார பராமரிப்பு நிறுவனத்திலும் தஞ்சோங் பகார் பிளாசாவில் இருக்கும் லாசர் கிளினிக் என்ற மருந்தகத்திலும் மக்கள் முன்பதிவு செய்யலாம்.

நியூசிலாந்தில் இருந்து

வருவோருக்கு கடும் கட்டுப்பாடு

நியூசிலாந்தில் கொவிட்-19 தொற்று அதிகரிக்கிறது. இதனால் நியூசிலாந்தில் இருந்து இங்கு வருவோருக்கு நாளை இரவு 11.59 மணி முதல் கட்டுப்பாடுகள் கடுமை யாகின்றன. இங்கு வருவதற்கு முந்தைய 21 நாட்களுக்குள் நியூசிலாந்தில் இருந்திருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால அனுமதிதாரர்கள் இங்கு தரை இறங்கையில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.

ஒரு வார காலம் தனித்து இருக்க வேண்டும். தனிமை உத்தரவு காலம் முடியும்போதும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படவேண்டும். இங்கு வருவதற்கு முந்தைய 21 நாட் களில் நியூசிலாந்தில் இருந்திருக்கும் குறுகிய கால பயணிகளுக்கு இங்கு அனுமதி கிடைக்காது என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.

விசாரணையில் 301 பேர்

வர்த்தக விவகாரத் துறை அதிகாரிகளும் ஏழு காவல் துறை (போலிஸ்) நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இம்மாதம் 14 முதல் 27 வரை பல பகுதிகளிலும் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 301 பேர் சிக்கினர். 16 முதல் 74 வரை வயதுள்ள அவர்களில் 197 பேர் ஆண்கள். 104 பேர் பெண்கள். சந்தேக நபர்கள் 640க்கும் மேற்பட்ட மோசடி களில் ஈடுபட்டு இருப்பதாகவும் அவற்றில் 7.7 மில்லிய னுக்கும் அதிக தொகையைப் பலரும் இழந்துள்ளதாகவும் நம்பப்படுவதாக போலிஸ் தெரிவித்துள்ளது. புலன் விசாரணை தொடர்கிறது.

விமானநிலைய ஊழியருக்கு நன்மை

சாங்கி விமானநிலையத்தில் பணியாற்றும் ஏறத்தாழ 50,000 ஊழியர்கள் உடல் மற்றும் மன நல்வாழ்வுச் செயல்திட்டங் கள் மூலம் பலன் அடைவர். சாங்கி விமான நிலையக் குழுமத்திற்கும் சாங்கி பொது மருத்துவமனைக்கும் இடை யிலான ஒத்துழைப்பின் ஓர் அங்கமாக இது இடம்பெறும்.

நல்வாழ்வுச் செயல்திட்டங்களை உருவாக்குவது உள்ளிட்ட நான்கு துறைகளில் இது கவனம் செலுத்தும். இதற்கான புரிந்துணர்வுக் குறிப்பு நேற்று கையெழுத்தானது. அதில் கலந்துகொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், 50,000 ஊழியர்களைப் பாராட்டி பராமரிப்புப் பொருட்களை விநியோகிக்கும் ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.