வேலை தொடர்பான மோசடிகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக நம்பப்படும் ஒரு கும்பலை சிங்கப்பூர், மலேசிய போலிசார் முறியடித்தனர்.
அந்த மோசடிகளில் $1.35 மில்லியனுக்கும் அதிக தொகை சம்பந்தப்பட்டுள்ளது.
ஜோகூரில் அடுக்குமாடி வீடு ஒன்றில் மலேசிய போலிசார் சோதனை நடத்தியதில் 21 முதல் 27 வரை வயதுள்ள மலேசியர்கள் மூன்று பேர் சிக்கினர்.
அந்தக் கும்பல் சிங்கப்பூரில் தெரிவிக்கப்பட்ட 188க்கும் அதிகமான வேலை மோசடிகளுக்குப் பொறுப்பு என்று நம்பப்படுகிறது.
இதனிடையே, வர்த்தக விவகாரத் துறை அதிகாரி கள் அந்த மோசடிகளில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 16 முதல் 23 வரை வயதுள்ள ஆறு ஆடவர்களையும் ஒரு மாதையும் கைது செய்ததாக இருநாட்டு போலிஸ் படைகளும் அறிக்கையில் தெரிவித்தன.

