இன நல்லிணக்கம் பேண புதிய சட்டம்

இன நல்லிணக்கம் பேண புதிய சட்டம்

3 mins read
17669ad8-33af-4ceb-9652-2968bb91f54a
-

பல்­வேறு குழுக்­க­ளி­டையே மிதமான அணு­கு­மு­றையை ஊக்கு­வித்து, எது சரி, எது தவறு என்­பதை சமு­தா­யம் தீர்­மா­னிக்­கும் என்­பதை கோடி­காட்ட இன­ நல்­லி­ணக்­கம் தொடர்­பான புதிய சட்­டம் ஒன்றை சிங்­கப்­பூர் இயற்­ற­வுள்­ளது என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் தெரி­வித்­துள்­ளார்.

இன­ நல்­லி­ணக்க பரா­ம­ரிப்­புச் சட்­டம் என்ற இந்­தப் புதிய சட்­டம், இனம் தொடர்­பான பிரச்­சினை களைக் கையாள்­வ­தற்­கான அரசின் அதி­கா­ரங்­களை ஒரு சட்­டத்­தில் உள்­ள­டக்­கு­கிறது.

இனம் தொடர்­பான குற்­றங்­களுக்கு தண்­டனை வழங்­கு­வ­தை­யும் தாண்டி, நல்­லி­ணக்­கத்தைத் தூண்­டு­வது, மறு­வாழ்­வுப் பயிற்­சி­களை அளிப்­பது போன்ற மித­மான அணு­கு­மு­றை­க­ளை­யும் இச்­சட்­டம் கொண்­டி­ருக்­கும்.

எடுத்­துக்­காட்­டாக, குற்­றம் இழைக்­கும் ஒரு­வர், அக்­குற்­றத்தை மீண்­டும் செய்­யா­மல் இருக்­க­வும் அதைச் சரி­செய்­யும் வித­மா­க­வும் பாதிக்­கப்­பட்­ட­வ­ரின் இனம் பற்றி விரி­வா­கத் தெரிந்­து­கொள்­ள­வும் அந்த இனத்­த­வ­ரு­ட­னான உற­வு­களை மேம்­ப­டுத்­தும் வித­மாக குற்றம்­பு­ரிந்­த­வ­ரைச் செயல்­பட வைக்­க­வும் அர­சாங்­கத்­திற்கு அதி­கா­ரம் அளிக்­கும்.

இத்­த­கைய மித­மான அணு­கு­முறை பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு மனக்­க­சப்பை உண்­டு­பண்­ணா­மல், காயத்தை ஆற்­றும் என்­றார் அவர்.

இது­போன்ற ஒரு சட்­டம்தான் சமய நல்­லி­ணக்­கம் பரா­ம­ரிப்­புச் சட்டம். இச்­சட்­டத்­தின் மூலம் இது­வ­ரை­யில் எவ்­வி­த­மான தண்­ட­னை­யும் வழங்­கப்­ப­ட­வில்லை. எனி­னும், சட்­டம் என ஒன்று இருப்­பதே நல்ல பயன் தந்­துள்­ளது. இச்­சட்­டம் சமய சகிப்­பின்­மை­யைக் குறைக்­க­வும் சமய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வும் உத­வி­யுள்­ளது என்று பிர­த­மர் கூறி­னார்.

இதே­போல், புதிய இன நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டம் மித­மான போக்கை ஊக்­கு­விப்­ப­து­டன் பல இனத்­த­வ­ரி­டையே சகிப்­புத் தன்­மையை வளர்க்க உத­வும்.

இச்­சட்­டத்­தின் மூலம் சிங்­கப்­பூர், இன நல்­லி­ணக்­கத்­துக்கு தலை­யாய முக்­கி­யத்­து­வம் தரு­கிறது என்­பது கோடி­காட்­டப்­படும்.

இனம், சம­யம் தொடர்­பான நமது கொள்­கை­க­ளை­ நாம் தற்­கால நிலை­மைக்கு ஏற்­ற­வாறு வகுக்க வேண்­டும். ஏனெ­னில், இன சமய நல்­லி­ணக்­கம் என்­பது நுட்­ப­மா­னது, துடிப்­பா­னது என்றார் பிர­த­மர்.

ஒரு சமு­தா­ய­மாக சிங்­கப்­பூர் கொண்­டி­ருக்­கும் பண்­பு­நெ­றி­களும் நம்­பிக்­கை­களும் காலப்­போக்­கில் மாறு­கின்­றன. ஒவ்­வொரு தலை­முறை­யும் இனம் தொடர்­பான பிரச்­சி­னை­களில் தனது தனிப்­பட்ட கண்­ணோட்­டத்­தைக் கொண்­டி­ருக்­கிறது.

முதிய சிங்­கப்­பூ­ரர்­கள் நாடு சுதந்­தி­ரம் அடைந்த கால­கட்­டத்­தில் வாழ்ந்­துள்­ள­னர். இத்­த­கைய விவகாரங்களைப் பேசு­வது சச்­ச­ரவை வளர்த்து, வாக்­கு­வா­தங்­களுக்கு இட்­டுச்­செல்­ல­லாம் என்­பது அவர்­க­ளு­டைய கருத்து.

இளைய சிங்­கப்­பூ­ரர்­களோ, ஆரம்ப காலங்­களில் ஏற்­பட்ட இனப் பதற்­ற­மான சூழ­லை­யும் கல­வ­ரங்­களை­யும் அனு­ப­வித்­த­தில்லை. நாம் முதிர்ச்­சி­ய­டைந்­து­விட்டோம் நாடு சீராக உள்­ளது. தற்­போ­தைய நிலை­மையை மேம்­படுத்த நாம் விரும்­பு­கி­றோம். இதற்­காக, இனம், சம­யம் தொடர்­பான பிரச்­சி­னை­களை வெளிப்­ப­டை­யா­கப் பேசி நமது கொள்­கை­க­ளை­யும் அனு­மா­னங்­க­ளை­யும் மறு ஆய்வு செய்ய வேண்­டும் என்று இளை­யர்­கள் கரு­து­வ­தாக திரு லீ கூறி­னார்.

இது­போன்ற தலை­மு­றை­க­ளுக்­கி­டையே உள்ள மாறு­பட்ட கருத்து­கள் புரிந்­து­கொள்­ளக்­கூ­டி­யதே. அவற்றை சிங்­கப்­பூர் அனுச­ரித்­துச் செல்ல வேண்­டும்.

உல­கம் மாறி வரு­கிறது. வெளி­நா­டு­களில் நடை­பெ­றும் சம்­ப­வங்­கள் சிங்­கப்­பூ­ரில் தாக்­கத்தை ஏற்­படுத்­து­கின்­றன. அமெ­ரிக்­கா­வில் ஏற்­பட்­டுள்ள 'கறுப்­பின உயிர்­கள் மதிக்கத்தக்­க­வையே' என்ற இயக்­கம், இஸ்­‌ரே­லுக்­கும் காஸா­வி­லுள்ள பாலஸ்­தீ­னர்­க­ளுக்­கும் இடை­யே­யான வன்­முறை போன்­றவை சிங்­கப்­பூ­ரில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

சிங்­கப்­பூ­ரின் சூழல் இவற்­றி­லி­ருந்து முற்­றி­லும் மாறு­பட்­டவை. அது­போல் இவை சிங்­கப்­பூ­ரர்­களுக்­கி­டையே ஏற்­படும் சச்­ச­ர­வு­களும் அல்ல. எனி­னும் இவை, சிங்­கப்­பூர் மக்­க­ளைப் பாதிக்­கின்­றன. இத­னால், அவ்­வப்­போது இனம், சம­யம் தொடர்­பான சிங்­கப்­பூ­ரின் கொள்­கை­களை, சிங்­கப்­பூ­ரின் தேவை­க­ளுக்கு ஏற்ப சரி­செய்து கொள்ள வேண்­டும் என்று தெரி­வித்­தார் பிர­த­மர் லீ.