அணுகுமுறை தவறாகிவிடாது

அணுகுமுறை தவறாகிவிடாது

1 mins read
d8d5ecee-1b7e-4632-bc46-beeeee4b64b2
-

சிங்­கப்­பூ­ரின் இன நல்­லி­ணக்­கம் மிக­வும் மென்­மை­யா­னது என்று அண்­மைய இன­வா­தச் சம்­ப­வங்­கள் நினை­வு­ப­டுத்­தி­யுள்­ளன. எனி­னும் அவற்­றால் இன நல்­லி­ணக்­கம் குறித்த நாட்­டின் அணு­கு­முறை தவ­றா­கி­வி­டாது என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்­றைய தேசிய தினக் கூட்ட உரை­யில் கூறி­னார்.

கடும் உழைப்பு, தியா­கம், விவே­கம் ஆகி­வற்­றைக் கொண்டு குடி­ய­ரசு இன நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கி­யது என்ற திரு லீ, விட்டுக்­ கொ­டுப்பதன்வழி வெவ்­வேறு இனச் சமூ­கங்­கள் சம­நி­லையை எட்­டி­யுள்­ள­தா­கக் கூறி­னார்.

இது அரி­தான, அரு­மை­யான சாதனை என்­ற­போ­தும் இச்சமநிலை நுட்­ப­மா­னது என்றார் அவர்.

நாடு­க­ளின் வர­லாற்­றில் 56 ஆண்­டு­கள் மிக­வும் குறு­கிய காலம் என்ற அவர், சிங்­கப்­பூ­ரின் இன நல்­லி­ணக்­கப் பணி நீண்­ட­கா­லத்­துக்கு செய்யவேண்டியது என்று கூறி­னார்.

இன­வா­தச் செயல்­களை உறு­தி­ யு­டன் கண்­டித்து, வேறொரு போர்­வை­யில் இன­ரீ­தி­யான குழப்­பம் வேண்­டுமென்றே தூண்­டப்­ப­டு­வதை எதிர்த்­துப் பேசும் தார்­மீ­கத் துணிவு சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு இருக்க வேண்டும் என்­றார் பிர­த­மர் லீ.