இரவு உணவில் இன நல்லிணக்கம்

இரவு உணவில் இன நல்லிணக்கம்

1 mins read
89f98d27-6437-448d-8c75-ba9d7d6e7f5b
-

தேசிய தினப் பேரணியில் பங்கேற்ற நாடா­ளு­மன்ற நாய­கர் டான் சுவான் ஜின் தாம் உண்ட கோழி பிரி­யா­ணியை நேற்று காணொ­ளியாக ஃபேஸ்புக் தளத்­தில் பதி­விட்­டார். அவ­ரைப்போல மீடி­ய­கார்ப் அரங்­கத்­தில் இருந்த பார்­வை­யா­ளர்­க­ளுக்கு இன நல்­லி­ணக்­கத்­தைக் கருப்­பொருளாகக் கொண்டு இரவு உணவு வழங்­கப்­பட்­டது. இந்­திய கோழி பிரியாணி, சீன ஃபிரைட் ரைஸ், மலாய் மீ சியாம் போன்ற உண­வு­கள் அளிக்­கப்­பட்­டன. சிறப்­புத் தேவை­யுள்­ள­வர்­களும் அவர்­க­ளது பரா­ம­ரிப்­பாளர்­களும் நடத்­தும் ஃபுட் ஃபார் எ காஸ் எனும் அமைப்பு உணவை வழங்கி­யது.